Shadow

Tag: ரேஷ்மா வெங்கடேஷ்

சாலா விமர்சனம்

சாலா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விட்னெஸ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களைத் தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ளது. ஒரு பாருக்கான (Bar) போர் என்பதுதான் படத்திம் டேக்-லைன். படத்தின் ஒரு வரிக்கதையும் அதுவே! குணாக்கும் தங்கதுரைக்கும் இடையேயான தகராறில் ராயபுரம் பார்வதி பார் இழுத்து மூடப்படுகிறது. குணாவின் வளர்ப்புத் தம்பியான சாலா, பார்வதி பார் அண்ணனுக்குத்தான் என சபதம் எடுக்கிறார். இருபத்து மூன்று வருடங்களிற்குப் பிறகு, பார்வதி பார் ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் வென்றது குணாவா, தங்கதுரையா என்பதே படத்தின் முடிவு. தங்கதுரையாக சார்லஸ் வினோத் நடித்துள்ளார். வில்லனாக அவர் தோளை உயர்த்தி நிமிரும் கணங்களில் எல்லாம் சாலாவால் மூக்கு உடைப்படுகிறார். தனது உயிரைக் காப்பாற்றிய சாலா, தாஸ் என இரண்டு சிறுவர்களை எடுத்து வளர்க்கிறார் குணா. குணாவாக அருள்தாஸ் நடித்துள்ளார். அவரது ஆகிருதிக்குக் கொடுக்கப்படும் வழக்கமான பாத்திரத்தை ...
ரசவாதி விமர்சனம்

ரசவாதி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குற்றப்பின்னணியுடன் அறிமுகமாகும் ஒரு காவல்துறை அதிகாரி. சித்த மருத்துவம் செய்து கொண்டு, இயற்கை ஆர்வலராக அமைதியான முறையில் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கும் ஒரு சித்த வைத்தியர். இந்த சித்த வைத்தியர் மீதும், அவருக்கு இருக்கும் காதல் மற்றும் காதலி மீதும் இந்தக் காவல்துறை அதிகாரிக்கு தீராத வன்மம். வன்மம் ஏன், வன்மத்தால் விளைந்தது என்ன என்பதே இந்த ரசவாதி திரைப்படத்தின் கதை. மெளனகுரு, மகாமுனி திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சாந்தகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.  சித்தவைத்தியர் சதாசிவ பாண்டியனாக அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார். ஒரு காலை சற்று தாங்கித் தாங்கி நடந்து கொண்டு, யானை போன்ற வனவிலங்குகளின் காலில் உடைந்த மதுபாட்டில்கள் காயத்தை ஏற்படுத்திவிடும் என்கின்ற அக்கறையுடன் அவற்றை அப்புறப்படுத்தும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். சந்திராவாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷிற...