Shadow

Tag: ரோபோ சங்கர்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிறுவயதில் சலூன் கடைக்கு முடி திருத்தம் செய்யப் போகும் போது இல்லாத தன்னம்பிக்கை முடி திருத்தம் செய்து முந்நூற்று அறுபது டிகிரி கண்ணாடிகளில் நம்மையும் திருத்தப்பட்ட நம் தலையையும் பார்த்து,, “ச்சே நாம கூட நல்லாதான்டே இருக்கோம்…” என்று மனதுக்குள் மகிழ்ந்தபடி வெளியேறும் போது தன்மானம் தாறுமாறாக ஏறியிருக்கும். நம்மை இப்படி அழகாக்கி அனுப்பிய சலூன் கடைக்காரர் மீது மரியாதை கலந்த அபிமானமும்,  அதே சீப்பு தான் வீட்டிலும் இருக்கிறது, ஆனால் இவர் சீவுவது மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது என்கின்ற கேள்வியோடு வீடு திரும்புவோம். இந்த அனுபவம் பெரும்பாலான ஆண்களுக்கு ஏற்பட்டிருக்கும். அப்படி ஒரு அனுபவம் தான் படத்தின் நாயகனாக வரும் ஆர்.ஜே.பாலாஜிக்கும்  முடி திருத்துநராக வரும் லால் இருவருக்கும் இடையே நடக்கிறது. மேற்சொன்னபடி அப்படியே நடக்காமல் அறிமுகம் வேறு ஒரு புதிய திணுசில் ரசிக்கும்படியே நடக்க...
Are you ok baby விமர்சனம்

Are you ok baby விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 ஒரு விசித்திரமான சூழலில் தனக்குப் பிறந்த குழந்தையை ஒரு தாய் பணம் பெற்றுக் கொண்டு தத்தெடுத்து வளர்க்க விரும்பும் தம்பதிக்கு கொடுத்துவிடுகிறாள். அவளே ஒரு வருடம் கழித்து தன் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தையும்  அணுகுகிறாள்.  முடிவு என்ன ஆனது என்பதே “Are You Ok Baby” திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை.இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன் ஹோஸ்டிங் செய்து நடத்திய “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியைப் போன்ற “சொல்லாததும் உண்மை” என்கின்ற நிகழ்ச்சியில் இருந்து தான் திரைப்படம் துவங்குகிறது.  அந்த நிகழ்ச்சியை திரைப்படத்திற்குள் வழங்குபவராக லஷ்மி ராமகிருஷ்ணன் நடித்திருப்பதோடு இப்படத்தை இயக்கியும் இருக்கிறார்.“சொல்லாததும் உண்மை” என்கின்ற அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒரு இளம்பெண், தன் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய குழந்தையை சிலர் பணம் கொடுத்து பெற்றுக் கொண...
பாட்னர் விமர்சனம்

பாட்னர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். அவரிடம் இறந்த நபர்களின் டி.என்.ஏ-வை எடுத்து உயிருள்ள மற்றொரு நபரின் உடலில் செலுத்தி இறந்தவரின் குணநலன்களையும் அறிவையும் உயிருள்ளவரின் உடலுக்குள் கொண்டு வருவதற்கான ஆராய்ச்சி முடிவுகள் அடங்கிய ஒரு பென் டிரைவ், அதை கொள்ளையடிக்க துடிக்கும் அவரின் முன்னாள் உதவியாளரான ஜான் விஜய்,   அந்த பணியை செய்ய முன்னாள் உதவியாளர் நியமிக்கும்  ரோபோ சங்கர் அடங்கிய ஒரு டம்மி டீம்,  திருடுவதையே தொழிலாகக் கொண்டு இயங்கும் ஒரு கம்பெனியில் பணியாற்றும்  யோகி பாபு, ஊரில் தன் தங்கை திருமணத்தை நிறுத்த 25 இலட்சம் தேவை என்று யோகி பாபுவை தேடி வரும் நாயகன் ஆதி.  திருட்டு கம்பெனிக்கு தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வரும் அரசியல்வாதி ரவிமரியா.  இவர்களுக்குள் நடக்கும் வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டும்,  அதற்கிடையேயான ஆள்மாறாட்ட விளையாட்டும், அதன் பிறகு அ...