Shadow

Tag: லாவண்யா திரிபாதி

மாயவன் விமர்சனம்

மாயவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலை செய்பவன் இறந்து விடுகிறான். ஆனாலும், ஒரே மாதிரியான கொலைகள், கொலையாளி இறந்த பின்னும் தொடர்ந்து நடக்கின்றன. யார் இக்கொலைகளைச் செய்வது, எப்படிச் செய்யப்படுகிறது என்பது தான் மாயவன் படத்தின் கதை. மாயவன் – யார் கண்ணுக்கும் தெரிவதில்லை; அவனுக்கு இறப்பும் நேருவதில்லை. உடல்களை மட்டும் மாயவன் மாற்றிக் கொண்டே இருக்கிறான். ஆனால், இது கூடு விட்டு கூடு பாயும் கதையில்லை. தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கும் முதல் படமிது. நேரத்தை வளர்க்காமல் முதல் ஃப்ரேமிலேயே கதையைத் தொடங்கி அசத்தி விடுகிறார். அதுவும் படம் தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே, ஒரு கொலைச் சம்பவத்தைப் போலீஸ் அதிகாரி ஒருவர் பார்க்க நேரிடுகிறது எனச் சுவாரசியமான ஒரு காட்சியினை வைத்து, பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார். படத்தொகுப்பாளர் லியோ ஜான் பாலும், இசையமைப்பாளர் ஜிப்ரானும், அந்த விறுவிறுப்பைக் கடைசி வரை தக்க வைக்க உதவியுள்ள...
பிரம்மன் விமர்சனம்

பிரம்மன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நமது பொறுமையைச் சோதித்தறிந்து கொள்ள மீண்டுமொரு ஓர் அற்புத வாய்ப்பை நல்குகிறது பிரம்மன். தான் கோயிலாக மதிக்கும் தியேட்டரைக் காப்பாற்ற புறப்படுகிறான் நாயகன். இது முதற்பாதி. நான்காவதுவரை கூட படித்த உயிர் நண்பனுக்காக எல்லாத்தையும் விட்டுக்(!?) கொடுக்கிறான். இது இரண்டாம்பாதி. தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தும் சிவாவாக சசிகுமார். டி-ஷர்ட், ஜீன்ஸ் என மாடர்ன் உடையில் வருகிறார். இம்முறை, “நண்பன் ஜெயிச்சா நாம ஜெயிச்ச மாதிரி” என்ற பன்ச் வேலைக்காமல் போய்விட்டது. காரணம் அவ்வளவு திராபையான திரைக்கதை. டைட்டில் கிரெடிட் போடும் பொழுது பசங்க இருவரின் ஆர்வம் கொஞ்சம் புதுமையாகத் தெரிந்தது. அதோடு சரி. மனிதருக்கு பணிவு இருக்க வேண்டியதுதான். அறிமுக இயக்குநர் சாக்ரடீஸுக்கு அது மிக அதிகமாகவே இருக்கிறது. படத்தில் ஒரு காட்சி வைத்திருக்கிறார். உதவி இயக்குநராக இருக்கும் சூரியை அணுகி சென்ச்சுரி சினிமாஸ் மேனேஜர் கத...