Shadow

Tag: லிவிங்ஸ்டன்

பேரழகி ஐ.எஸ்.ஓ விமர்சனம்

பேரழகி ஐ.எஸ்.ஓ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இளமையையும், பேரழகையும் தரும் சித்தரின் சூட்சும ஃபார்முலா, அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திடம் சிக்குகிறது. அந்நிறுவனம், ஆதரவற்ற முதியவர்கள் மீது அந்த ஃபார்முலாவைப் பரிசோதித்துப் பார்க்கின்றனர். அவர்களிடம் சிக்கும் சச்சுவின் மேல் அம்மருந்து பிரயோகிக்கப்பட, சச்சு தன் பேத்தி ஷில்பா மஞ்சுநாத் போல் உருமாறிவிடுகிறார். உருவ ஒற்றுமை ஏற்படுத்தும் குழப்பத்தை நகைச்சுவையாகவும், கார்ப்ரேட் கம்பெனியின் தகிடுதத்தத்தை சீரியசாகவும் படம் சொல்லியுள்ளது. 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாக நடித்துள்ளார். பேத்தி காதலைச் சொல்லிவிட, பாட்டியோ முறைப்பைக் காட்ட, விஜய் தவிக்கும் காட்சிகள் நன்றாக உள்ளன. ஷில்பா மஞ்சுநாதின் அப்பாவாக லிவிங்ஸ்டன் நடித்துள்ளார். அவரது அம்மாவான சச்சுவை, லிவிங்ஸ்டனின் மனைவி சாடை பேசி விட, சச்சு கோபித்துக் கொண்டு வெளியேறி கா...
சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு ஜாலியான படம், அதைத் தொடர்ந்து ஒரு சீரியசான படமென்று தனக்கொரு பாணியை உருவாக்கி வருகிறார் விஷ்ணு விஷால். ராட்சசன் எனும் த்ரில்லர் படத்தைத் தொடர்ந்து, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஸ்டைலில் முழு நீள நகைச்சுவை படமாக, அவரது நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளிவந்துள்ளது. எந்த வம்புதும்புக்கும் போகாத மாaணிக்கமாக வாழ்பவர் கான்ஸ்டபிள் சத்யமூர்த்தி. தான் பிறவி எடுத்ததே, காவல்நிலையத்தில் உள்ள சக காவலதிகாரிகளுக்கு உணவு வாங்கிவரத்தான் என்று கடமையில் கண்ணுமாய்க் கருத்துமாய் இருப்பார். அவர் ஹாஃப்-பாயிலை வாயில் வைக்கக் கொண்டு போகும் பொழுது யாராவது தட்டி விட்டால் மட்டும் பாட்ஷாவாக ருத்ர தாண்டவம் ஆடிடுவார். இந்த ஹாஃப்-பாயில் பலவீனம் சத்யமூர்த்தியை எங்குக் கொண்டு போய் நிறுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை. தொடக்கம் முதலே படம் நகைச்சுவையாகப் பயணித்தாலும், பெரும் தாதாவான சைக்கிள் ஷங்கரின் கைத...