Shadow

Tag: வம்சி கிருஷ்ணா

குற்றம் 23 விமர்சனம்

குற்றம் 23 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
23 குரோமோசோன்களை மையப்படுத்தி நடக்கும் மெடிக்கல் க்ரைம் தான் படத்தின் கதை. நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் கதையை அடிப்படையாகக் கொண்டு சுவாரசியமான திரைக்கதை அமைத்துள்ளார் ஈரம் பட இயக்குநரான அறிவழகன். படத்தின் டைட்டில் போடும் பொழுதே கதை தொடங்கி விடுகிறது. டைட்டிலின் ஊடே வரும் அனிமேஷன் மிக அற்புதமாக உள்ளது. ஆணின் விந்து பெண்ணின் கருமுட்டையை அடைந்து கருவாய் உரு கொள்வதை அனிமேஷனாக்கி உள்ளனர். இதயம், கை, கால், விரல்கள் என ஒவ்வொன்றாய்த் தோன்றி, கருவிலுள்ள சிசு புன்னகைக்கும் பொழுது பரவசமாய் உள்ளது. தேவையற்ற அறிமுகங்கள் இல்லாமல், நேரடியாகக் கதைக்குள் சென்று விடுகின்றனர். வில்லிவாக்கம் சர்ச்சின் பிரம்மாண்டத்தை தன் கேமிரா கோணத்தால் ரசிக்கும்படி அமைத்துள்ளார். படத்தில் வரும் அனைத்து ஷாட்ஸுமே ரசிக்க வைக்கின்றன. கலை இயக்குநர் ஷக்தியின் பங்கு மகத்தானது. படம் நெடுகே, கதைக்கும் கதை நடக்கும் இடத்திற்கும் இயை...
தடையறத் தாக்க விமர்சனம்

தடையறத் தாக்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படம் தொடங்கிய முதல் ஃப்ரேம்மில் இருந்து பார்வையாளர்களைக் கட்டிப் போட முடியுமா? அதை சாத்தியமாக்கி இருக்கார் மகிழ் திருமேனி. கதை சொல்லும் பாணியில் அவரது முதல் படமான முன்தினம் பார்த்தேனே படத்தில் இருந்து ரொம்பவே வித்தியாசப்படுத்தி உள்ளார். அப்பொழுது வந்திருந்த விண்ணத் தாண்டி வருவாயா போலவே அவரது முதல் படம் இருந்ததோடு, வாய்ஸ்-ஓவர் என்னும் கெளதம் வாசு தேவ் மேனனின் ஸ்டைல் படம் முழுக்க விரவி இருந்தது. அவரிடம் அசோசியேட்டாக ஒரு படத்தில் பணிப் புரிந்த பாதிப்பாக இருக்கலாம். ஆனால் இம்முறை அருண் விஜய்யை வைத்து அருமையான ஆக்ஷன் படத்தைக் கொடுத்துள்ளார்.ட்ராவல் ஏஜென்சி வைத்திருக்கும் செல்வாவிற்கு அவரது காதலி ப்ரியாவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எதிர்பாராவிதமாக மஹா என்னும் ரவுடியைக் கொன்று விட்டான் என செல்வா மீது பழி வந்து விழுகிறது. செல்வாவைக் கொன்று&nb...