ஜெமீமா வாத்து – இது பிராணிகளின் தோட்டம்
மிகவும் பிரபலமான குழந்தைகள் எழுத்தாளரும் ஓவியருமான ப்யாட்ரிகஸ் பாட்டரின் கதைகளை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர் வானம் பதிப்பகம். குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதியின் மிக எளிமையான மொழிபெயர்ப்பு இந்நூலின் பெரும் வரபிரசாதம். ஒரு மொழிபெயர்ப்பினைப் படிக்கிறோம் என்ற அயற்சியைத் தராமல் நேரடி தமிழ்க் கதையைப் படிப்பது போல் உள்ளது சிறப்பு.
1866 ஆம் ஆண்டு பிறந்த ஹெலன் ப்யாட்ரிக்ஸ் பாட்டரின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவரது வயதினையொத்த சிறுவர்களுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது. பிராணிகளை வளர்ப்பது தான் அவரது முன் இருந்த ஒரே பொழுதுபோக்கு. இங்கிலாந்தில் பிறந்த அவரது விடுமுறைக் காலம் இயற்கை எழில் கொஞ்சும் ஸ்காட்லாந்தில் கழிந்தது. இத்தகைய சூழலில் வளர்ந்தவர், பின்னாளில் ‘ஹெர்ட்விக் ...