
Gembrio Pictures – அர்ஜுன் தாஸின் ‘பாம்’ ஃபர்ஸ்ட் லுக்
ஜெம்ப்ரியோ (Gembrio) பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன், TSK, கிச்சா ரவி, பூவையார், முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சில நேரங்களில் சில மனிதர்கள் படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் என்டர்டெயினர் ட்ரமாவாக உருவாகியுள்ள “பாம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், படக்குழுவினர் கலந்துகொள்ள, கல்லூரி மாணவர்கள் முன்னிலையில், கோலாகலமாக வெளியிடப்பட்டது.
எஸ்ஆர்எம் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், இசை நடன நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இவ்விழா நடைபெற்றது.
இவ்விழாவினில் பேசிய தயாரிப்பாளர் சுதா சுகுமார், "ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இப்படம். நல்லதொரு குழுவின் உழைப்பில், மிகச் சிறந்த படைப்பாக இப்படம் வந்துள்ளது. ...




