Shadow

Tag: ஷ்ரத்தா ஸ்ரீநாத்

கலியுகம் – போஸ்ட் அபோகலிப்டிக் த்ரில்லர்

கலியுகம் – போஸ்ட் அபோகலிப்டிக் த்ரில்லர்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
ஷ்ரத்தா ஸ்ரீநாதும் கிஷோரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கலியுகம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளரான கே.எஸ்.ராமகிருஷ்ணா, ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேட் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கலியுகம்'. இதனை இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் 'விக்ரம் வேதா', 'நேர்கொண்ட பார்வை', 'விட்னஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் கிஷோர் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். கே. ராம்சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு டான் வின்சென்ட் இசை மற்றும் ஒலி வடிவமைப்பு பணியை ஏற்றிருக்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்கத்தைக் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை நிம்ஸ் மேற்கொண்டிருக்...
விட்னெஸ் விமர்சனம்

விட்னெஸ் விமர்சனம்

OTT, OTT Movie Review, திரை விமர்சனம்
பொதுச் சமூகத்தின் பரவலான கவனத்தைப் பெறாத ஒரு பெரும் சமூக அவலத்திற்கு, பார்வையாளர்களைச் சாட்சியாக்கியுள்ளார் இயக்குநர் தீபக். மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமையும், அதனால் நிகழும் மரணங்களும் இன்றும் நிகழ்கின்றன. அதுவும் எத்துணை நயமாக ஒரு குறிப்பிட்ட சாதியினர் மேல் அப்பணி சுமத்தப்படுகிறது என உறைய வைக்கும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் தீபக். கல்லூரி மாணவனான பார்த்திபனைக் கட்டாயப்படுத்தி கழிவுநீர்த் தொட்டிக்குள் இறக்கிச் சுத்தம் செய்ய வைக்கின்றனர். விஷ வாயு தாக்கி அவன் இறந்துவிட, அக்கொலை வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முனைகின்றனர் அந்த அப்பார்ட்மென்ட் வாசிகளும், கான்ட்ராக்டரும். தொழிற்சங்கத் தலைவரான பெத்துராஜின் தூண்டுதலில், பார்த்திபனின் அம்மா இந்திராணி, குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென நீதிமன்றத்தை அணுகுகிறார். என்ன தீர்ப்பு வருகிறது என்பதே படத்தின் முடிவு....
நேர்கொண்ட பார்வை விமர்சனம்

நேர்கொண்ட பார்வை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டிரோ! - புதுமைப் பெண், பாரதியார் மகாகவி இறந்தே 100 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. ஆனால், ஆண் வகுத்த வல்லாதிக்க விதிகளை மீறி, பாரதி கனவு கண்ட புதுமைப் பெண் என்பது இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ என்ற தலைப்பின் மூலம், இந்த இழிநிலையை மீண்டும் பொதுத்தளத்தில் ஓர் அழுத்தமான விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார் இயக்குநர் வினோத். ‘அர்ஜுன் ரெட்டி’ போன்று ஆணாதிக்கத்தை ஹீரோயிசமாகப் பேசும் படத்தினை ரீமேக் செய்யும் சம காலத்தில், அஜித் போன்ற மாஸ் ஹீரோ, “பின்க் (Pink)” எனும் அற்புதமான ஹிந்திப் பட...
K-13 விமர்சனம்

K-13 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
K13 என்பது சோவியத் யூனியனின் பிரபலமான ஏவுகணைகளில் ஒன்று. அமெரிக்காவின் சைட்வைண்டர் எனும் ஏவுகணையை ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்து K13 ஏவுகணையைத் தயாரித்து அசத்தியது சோவியத் யூனியன். அப்படி, இப்படத்தின் க்ளைமேக்ஸில் பிரதான கதாபாத்திரமான திலீப், ஒரு சம்பவத்தைத் தனக்குச் சாதகமாய் 'ரிவர்ஸ்' செய்து பயன்படுத்திக் கொள்கிறான். ஆக, K13 எனும் தலைப்பை ரிவர்ஸ் செய்யும் சாதுரியத்திற்கான குறியீட்டுப் பெயராகக் கொள்ளலாம். பாரில் சந்தித்துக் கொள்ளும் மதியழகனும் மலர்விழியும், ஒன்றாக மலர்விழியின் வீட்டிற்குச் செல்கின்றனர். விழிப்பு வந்து மதியழகன் கண்ணைத் திறந்தால், அவன் நாற்காலியில் கட்டப்பட்டிருக்கிறான். அந்த நாற்காலியின் பின்னாலுள்ள சோஃபாவில் வலதுக்கை நரம்பு அறுக்கப்பட்டு இறந்து கிடக்கிறாள் மலர்விழி. அது கொலையா, தற்கொலையா, எதற்காக ஏன் எப்படி மலர்விழி இறந்தாள் என்ற சைக்காலஜிக்கல் மிஸ்ட்ரி தான் படத்தின் கதை. ...
ரிச்சி விமர்சனம்

ரிச்சி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரிச்சி எனும் ரிச்சர்ட்டின் வாழ்க்கை எவ்வாறு எதனால் திசை மாறி, அவன் வாழ்க்கை என்னானது என்பதுதான் படத்தின் கதை. 2014இல் வெளியான 'உள்ளிடரு கண்டன்தே' என்ற கன்னடப் படத்தின் ரீமேக் ஆகும். ஓர் அசாத்திய பொறுமையைக் கோருகிறது படம். துண்டு துண்டாய், அத்தனை கதாபாத்திரங்களைக் கொண்டு, இயக்குநர் கதையை நேர்க்கோட்டிற்குக் க்ளைமேக்ஸில் கொண்டு வரும் முன் ஒரு வழியாகிவிடுகிறோம். படத்தில் கையாண்டுள்ள கதை சொல்லும் பாணிக்கு நாம் தயார் ஆகாதது ஒரு காரணம் என்றாலும், மெதுவாகத் தனித்தனி காட்சிகளாகக் கோர்வையற்று நகரும் திரைக்கதையே அதற்குப் பிரதான காரணம். தூத்துக்குடியைக் கதைக்களமாகக் கொண்டதால் கிறிஸ்துவப் பின்னணியில் கதை நகர்கிறது. கதை தொடங்கும் முன், அனிமேஷனில் சொல்லப்படும் மீனவன் கதையை உள்வாங்கிக் கொள்ள முடியாதளவு வேகமாகவும் அந்நியமாகவும் உள்ளது. அந்த முன் கதை, படத்தின் கதையைப் புரிந்து கொள்ள அவசியம். அது என்ன சி...