Shadow

Tag: ஆனந்த்ராஜ்

கதாநாயகன் விமர்சனம்

கதாநாயகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தைரியசாலிக்கே பெண் என்று சொல்லிவிடுகிறார் கதாநாயகியின் தந்தை. நாயகனோ சாலையைக் கடக்கக் கூட தொடை நடுங்குபவன். அவன் பயத்தை மீறி எப்படி கதாநாயகன் ஆகிறான் என்பதே படத்தின் கலகலப்பான் கதை. தாசில்தார் ஆஃபீசில் அட்டெண்டராக சூரியும், ரெவன்யூ இன்ஸ்பெக்டராக விஷ்ணு விஷாலும் பணிபுரிகின்றனர். இருவரும் ஆறாம் வகுப்பில் பிரிந்த நண்பர்கள் என ஒரு காமிக்கல் ஃபிளாஷ்-பேக் காட்டப்படுகிறது. சூரியின் கதாபாத்திரத்தின் பெயர் அண்ணாதுரை; விஷ்ணு விஷாலின் பெயர் தம்பிதுரை. நாயகனின் நண்பர்கள் செய்யும் அதே வேலையைத்தான் சூரி இப்படத்தில் செய்கிறார். தம்பியின் காதலுக்கு உதவுவது தான் அண்ணாவின் பிரதான வேலை. நாயகனின் பயத்தைப் பார்த்து, 'ரொம்ப அப்பாவி' எனக் காதலிக்கத் தொடங்கும் அழகு நாயகியாக கேத்ரின் தெரசா. சில காட்சிகள் ஸ்ஃபூப் மூவி போல் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படம் முழுமையான கலகலப்பைத் தரத் தவறி விடுகிறது. முழு நீள நகைச்சு...
மகிழ்ச்சியில் திளைக்கும் கதாநாயகன்

மகிழ்ச்சியில் திளைக்கும் கதாநாயகன்

சினிமா, திரைச் செய்தி
விஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்னு விஷால் தயாரிக்கும் முதல் படம் கதாநாயகன் ஆகும். இப்படத்தில் விஷ்னுவிஷால் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைக்க, வெண்ணிலா கபடி குழு படத்தின் ஒளிப்பதிவாளரான லெக்ஷ்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரண்யா பொன்வண்ணன் பேசுகையில், "விஷ்னுவிடம் குழந்தை முகம் உள்ளது. மேலும் எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொள்ள வேண்டிய ஆர்வமும் முயற்சியும் இருக்கிறது. இது அவரைக் கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். படத்தின் இயக்குநர் முருகானந்தம் மிகவும் திறமையானவர். ஒரு நடிகர் மக்களிடத்தில் எந்த மாதிரியான இடத்தைப் பெற்றிருக்கிறார் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வேலை வாங்குகிறார். இந்தப் படம் கண்டிப்பாக ஒரு ஃபேமில...
சிரிக்கச் செய்வார் ஆனந்த்ராஜ்

சிரிக்கச் செய்வார் ஆனந்த்ராஜ்

சினிமா, திரைத் துளி
அருள்நிதி - மஹிமா நம்பியார் நடிக்கும் திரைப்படம் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'. அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக நடிகர்கள் அஜ்மலும் ஆனந்தராஜும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்து, விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி அன்று ஆரம்பமாக இருக்கின்றது. "ஆனந்தராஜ் சாரின் கதாபாத்திரம் எங்கள் படத்தின் கதைக்கு மேலும் பலம் சேர்க்கும். அவரின் உடல் பாவனைகளும், வசனங்களும் நிச்சயமாக ரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்கச் செய்யும். அருள்நிதி சார் - அஜ்மல் - ஆனந்தராஜ் சார் ஆகியோரின் இந்தப் புதிய கூட்டணி, நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை வெல்லும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குநர் மு மாறன்....
புரூஸ் லீ விமர்சனம்

புரூஸ் லீ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகனின் பெயர் ஜெமினி கணேசன். பயங்கரமான பயந்தாங்கொள்ளி. திரையில் ஒரிஜினல் புரூஸ் லீ நடித்த படம் பார்த்தால் மட்டும் சிறுவன் ஜெமினி கணேசனுக்கு லேசாகத் தைரியம் வர மாதிரி இருக்கே 'அடடே..!' என அவனது அம்மா புரூஸ் லீ எனப் பெயர் அழைக்கிறார். ஆனாலும் நாயகனுக்கு தைரியம் மட்டும் வந்தபாடில்லை. புரூஸ் லீக்கு தைரியம் வராவிட்டால் என்ன? சரோஜா தேவி மீது காதல் வந்து விடுகிறது. முகத்திற்கு பெளடர் போட்டுக் கொண்டு பாடல்களுக்கு நடனமாடும் சரோஜா இல்லை, பயந்து நடுங்கும் நாயகனை நெஞ்சோடு அணைத்து ஆறுதல் சொல்லும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . படம் தொடங்கும் பொழுது வரும் டிஸ்க்ளெயிமர் சுவாரசியத்தைக் கூட்டுவதாக உள்ளது. 'சில படங்களில் இருந்து திருடியும் உள்ளோம்' என்பதே அது. அந்தச் சுவாரசியத்தை அதிகப்படுத்தும் விதமாக முனீஷ்காந்த் படத்தில் வில்லனாக வருகிறார். இது சீரியசான ஸ்பூஃப் மூவியா அல்லது முழு நீ...