Tag: ஆர்யா

சென்னை ராக்கர்ஸ் – செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்
நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டு செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் ஆட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் விளையாட இருக்கும் அணி தான் 'சென்னை ராக்கர்ஸ்'. தமிழ்த் திரையுலகைச் சார்ந்த சிறந்த நட்சத்திரங்களை உள்ளடக்கியுள்ளது சென்னை ராக்கர்ஸ்.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்காகப் பணிபுரிந்து வரும் 'டாட் காம் இன்போவே', 'அடத்தா', 'ஜிமாசா' மற்றும் 'கலாட்டா' ஆகிய நிறுவனங்களின் இயக்குநரும், தலைமை அதிகாரியுமான திரு. சி.ஆர்.வெங்கடேஷ் (சி.ஆர்.வி) இந்தச் சென்னை ராக்கர்ஸ் அணியின் உரிமையாளராகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது."தரமான பாட்மிண்டன் ஆட்டத்தைப் புதுமையான விதத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோள். நட்சத்திரங்கள் தங்களின் பாட்மிண்டன் திறமையை வெளிப்படுத்த சிறந்ததொரு தளமாக இந்த 'செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக்’ போட்டி விளங்கும். அதுமட்டுமின்றி, பாட்மி...

கரையேறிய ஓடம் – ராடான் குறும்பட விழா
ராடான் நிறுவனம் நடத்திய சர்வதேச குறும்பட விழாவின் முதற்பதிப்பின் இறுதிச் சுற்று இன்று மதியம் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
உலக அளவில் அமெரிக்காவில் இருந்து கலந்து கொண்ட ‘ஓடம்’ படம், சிறு குழந்தைகள் தங்கள் பெற்றோரை விட்டுப் பிரிந்து அகதிகளாகச் செல்வதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் முதற்பரிசை வென்றது. வாய்ப்புள்ளவர்கள் தவறாது காண வேண்டிய படம். உங்கள் மனதை உலுக்கிவிடும். அஞ்சலி இயக்கிய திகில் கதையைக் கொண்ட படமான ‘நிழல்’ இரண்டாம் பரிசையும் பெற்றது.
இவற்றிற்குப் பரிசளித்துப் பேசிய ஆர்யா, “குறும்படம் எடுப்பது வாய்ப்புத் தேடும் உதவி இயக்குநர்களுக்கு அவசியமான ஒன்று. அதைவிட்டுவிட்டு ஒரு மூனு மணி நேரம் கொடுங்க. முழுக் கதையையும் சொல்கிறேன் என்று யாராவது கேட்டால் எரிச்சலை உண்டாக்கும். பத்தாயிரம் சம்பள வேலைக்கே பதினைஞ்சு சர்டிஃபிகேட்டுகள் தேவைப்படுன்றன. அப்படி இருக்கும்போது க...

இஞ்சி இடுப்பழகி விமர்சனம்
குண்டாய் இருக்கிறார் ஸ்வீட்டி. அதனால் அவரது திருமணம் தள்ளிப் போகிறது. எப்படியாவது தன் மகளின் எடையை, மிகக் குறைந்த நாட்களிலேயே குறைத்து விடவேண்டுமென ‘ஜீரோ சைஸ்’-இல் சேர்க்கிறார் ராஜேஸ்வரி. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே, இது நிறைய தெலுங்குப் படம் கொஞ்சமே கொஞ்சம் மட்டும்தான் தமிழ்ப்படம் என்ற புரிதல் ஏற்பட்டு விடுகிறது. அதாவது க்ளோஸ்-அப் ஷாட்களில் ஒட்டும் கதாபாத்திரங்களின் உதடு, வைட் ஷாட்களில் ஒட்டாமல் போகிறது. ‘இது தமிழ்ப்படமும் தான்’ என்ற லேசான நம்பிக்கையையும், ‘சைஸ் ஜீரோ’ பாடலில் தன் நடனத்தால் சுக்குநாறாக நொறுக்கி விடுகிறார் அநி.
ஸ்வீட்டியான அனுஷ்காவை மட்டுமே மையப்படுத்தி படத்தை எடுத்துள்ளனர். அனுஷ்காவும், ஸ்வீட்டி எனும் கதாபாத்திரத்தை மிகவும் ரசித்துச் செய்துள்ளார். அதை நமக்கும் கடத்தி விடுகிறார். ஆர்யா முதல் இஞ்சி இடுப்பழகியான சோனல் செளஹன் வரை ...

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க விமர்சனம்
தனது 25வது படத்தை தானே தயாரித்து நடித்துள்ளார் ஆர்யா. அது, பாஸ் (எ) பாஸ்கரன் போன்றதொரு வெற்றிப் படமாக இருக்கவேண்டுமென விரும்பி மீண்டும் ராஜேஷின் இயக்கத்தில் சந்தானத்துடன் இணைந்துள்ளார் ஆர்யா.
வாசுவும் சரவணனும் ஒன்றாகப் படித்தவர்கள் மட்டுமல்ல, ஒன்றாகவே வளர்ந்து தொழில் செய்யும் மிக மிக நெருங்கிய நண்பர்கள். ஆனால் அவர்களின் மனைவிகளுக்கோ தங்கள் கணவரின் நண்பரைப் பிடிக்காமல் போய் விடுகிறது. நண்பனா? மனைவியா? என்ற இக்கட்டில் இருந்து நண்பர்கள் எப்படி மீள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
ராஜேஷ் மீண்டும் சந்தானத்தை முழுக்க முழுக்க நம்பி களமிறங்கியுள்ளார். இரண்டு நண்பர்கள், அதிலொரு நண்பனுக்கு “ஆழகான வெள்ளை நிற பெண்” மீது கண்டதும் காதல் வந்து, அவள் பின்னாலே சுற்றுவதென ராஜேஷ் தனக்கு மிகவும் பிடித்த கதையை விடாமல் இம்முறையும் பற்றிக் கொண்டுள்ளார். இம்முறை சந்தானமே படாதபாடுப்பட்டே ராஜேஷைக் காப்பாற்ற முயல...

ஆரம்பம் விமர்சனம்
அஜீத், விஷ்ணுவர்தன், சுபா, ஆர்யா, நயன்தாரா என ஏகத்துக்கும் கூட்டப்பட்ட எதிர்பார்ப்பு, கிஞ்சித்தும் குறையாமல் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளது. அஜீத் ரசிகர்களுக்கும், தமிழ்த்திரை ரசிகர்களுக்கும் இந்த தீபாவளி நல்லதோர் ஆரம்பமாக இருக்கும்.ஊழல் செய்யும் அரசியல்வாதி ஒருவர் லஞ்சம் வாங்கிக் கொண்டு, தீவிரவாதி ஒருவனைத் தப்பிக்க வைக்கப் பார்க்கிறார். பின் என்னானது என்பதுதான் கதை.அமர்க்களமாக அறிமுகமாகிறார் அஜித். மங்காத்தாவில் மிச்சம் வைத்திருந்த வில்லத்தனத்தை இப்படத்தில் தொடர்கிறார். தனது வயதிற்கேற்ற பாத்திரத்தில் தோன்றுகிறார். இளம் வெண்தாடியிலும் செம ஸ்டைலிஷாக இருக்கிறார். ‘டொக்.. டொக்..’ என சத்தமிட்டு அனைவருக்கும் டைம் ஃபிக்ஸ் செய்கிறார். படத்தில் இவருக்கு ஜோடியும் இல்லை; டூயட்டும் இல்லை. நாயகனாக நடிப்பவருக்கு 60 வயது என்றாலும், திரையில் கண்டிப்பாக 20>30 வயதுடைய நாயகி, காதலியாக இருந்தே ஆகவே...

வேட்டை விமர்சனம்
வேட்டை - இயக்குநர் லிங்குசாமியின் படம்.ஓர் ஊரில் பாசமிகு அண்ணன் தம்பி உள்ளனர். அண்ணன் பயங்கொள்ளியாகவும், தம்பி அதற்கு எதிர்மாறாகவும் உள்ளான். காவல் துறை அதிகாரியான அவர்களது தந்தை வேலையில் உள்ள பொழுதே இறப்பதால் அவரின் மூத்த மகனுக்கு அந்தப் பணி கிடைக்கிறது. அண்ணனின் பயத்தைப் போக்க வெளியில் இருந்து உதவி வருகிறான் தம்பி. இதை அவ்வூர் தாதாக்கள் தெரிந்துக் கொள்கின்றனர். பிறகு என்னாகிறது என்பதுடன் படம் சுபமாய் நிறைவுறுகிறது.குலவிச்சை கல்லாமல் பாகற் படும் என்ற பழமொழி படம் முழுவதும் அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது. "அப்பா போலீசு, தாத்தா போலீசு. உன் உடம்பில் போலீஸ் ரத்தம் ஓடுது" என்ற வசனத்தால் வாய்புலற்றப்படுகிறது. பிருந்தா சாரதியின் வசனங்கள் படத்தின் நகைச்சுவைக்கு உதவி உள்ளது.10 வருடத்திற்கு முன் லிங்குசாமியின் "ரன்" படத்தில் நடித்த மாதவனைக் காணவில்லை. இப்டத்தில் மாதவன் உப்பி போய் பெரிதாய் உள்...



