Shadow

Tag: ஆஹா தமிழ் ஓடிடி

பயோஸ்கோப் விமர்சனம்

பயோஸ்கோப் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பதினான்கு வருடங்களுக்கு முன் “வெங்காயம் (2011)” எனும் படத்தை இயக்கியிருந்தார் சங்ககிரி ராச்குமார். இயக்குநர் சேரனின் முயற்சியால், அப்படம் மீண்டும் 2012 இல் மறுபடியும் வெளியானது. வெங்காயம் படத்தை எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் எப்படி எடுத்தார் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார் ராச்குமார் சங்ககிரி. ஜோதிடத்தையும், நரபலி சடங்கையும் மிகக் காத்திரமாக சாடிய படம் வெங்காயம். அப்படத்தில் தன்னைத்தான் வில்லனாகச் சித்தரிக்கிறார்கள் என அறியும் செல்வாக்கான ஜோதிடர், ராச்குமாரின் படப்பிடிப்பை நிறுத்த முயற்சி செய்வதோடு, படம் வெளியாகக் கூடாதென்பதற்காகவும் காய்களை நகர்த்துகிறார். அப்படியே ஒரு படம் எடுக்கப்பட்டாலும், அப்படத்தை வெளியிட எத்தகைய சங்கடங்கள் எழும் என்பதையும், சினிமாவிற்குள் இருப்பவர்கள் வியாபாரத்தில் எப்படி ஏமாற்றுவார்கள் என்பதையும் சொல்லியுள்ளார் சங்ககிரி ராச்குமார். இந்தப் படத்தில் நடித்தவ...
‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில், எம்.எஸ். ராஜா இயக்கத்தில் ‘செவப்பி”

‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில், எம்.எஸ். ராஜா இயக்கத்தில் ‘செவப்பி”

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
'பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில், எம்.எஸ். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'செவப்பி- ஆஹா ஒரிஜினல்' ஜனவரி 12, 2024 அன்று ப்ரீமியர் ஆகிறது!நம்பிக்கைக்குரிய மற்றும் பாராட்டுக்குரிய படங்களை தயாரித்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது ஆஹா தமிழ். அந்த வரிசையில், இப்போது அவர்கள் 'செவப்பி' என்ற படத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர தயாராக உள்ளனர். ராஜேஷ்வர் காளிசாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தயாரித்திருக்க, எம். எஸ். ராஜா இந்த ஃபீல் குட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். குமரன் என்ற 5 வயது சிறுவனுடைய கதாபாத்திரமும், அவனது அம்மாவாக நடித்திருக்கும் 'பிக் பாஸ்' புகழ் பூர்ணிமா ரவியின் கதாபாத்திரமும் முதன்மையானது. பிரபல தமிழ் கலைஞரான ரிஷிகாந்த் சிறுவனின் தாய் மாமாவாக நடித்துள்ளார்.1990 களில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஐந்து வயது சிறுவனை சுற்றி நடக்கும்...