
“அவரது ஆற்றல் தீ போல!” – துரை செந்தில்குமார் | லீடர்
லெஜண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷன் டீசர் வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, " நான் உதவி இயக்குநராக இருந்தபோது லெஜெண்ட் சரவணனின் தந்தையை 1988 ஆம் ஆண்டில் சந்தித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் உதவி இயக்குநர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக இருப்பார்கள். அவருடைய கடைக்கு நாங்கள் அடிக்கடி செல்வோம். நூறு ரூபாய்க்கு கீழ் 99 ரூபாய்க்கு அவர்கள் ஒரு சட்டையை விற்பனை செய்வார்கள். நூறு ரூபாய் கிடைத்தவுடன் அந்த சட்டையை வாங்கலாம் என்பதற்காக அடிக்கடி அந்தக் கடைக்குச் சென்று பார்த்து விட்டு வருவோம், ஒரு முறை தீபாவளி தருணத்தில் 500 ரூபாய் கொடுத்தார்கள். அதை எடுத்துக்கொண்டு சட்டை...






