32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

இயக்குநர் தமிழ்

6 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
“எழுத்தாளர்களைத் தமிழ் சினிமா மதிக்கவேண்டும்” – இயக்குநர் தமிழ் சினிமா முக்கியச் செய்தி
14/03/2026 Dinesh R 3 நிமிட வாசிப்பு

“எழுத்தாளர்களைத் தமிழ் சினிமா மதிக்கவேண்டும்” – இயக்குநர் தமிழ்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அறிமுக நடிகர் LK அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் சிறை ஆகும். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்தப் படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
சிறை | வெளியீட்டுக்கு முன்பே காரைப் பரிசாக வாங்கிய இயக்குநர் சினிமா

சிறை | வெளியீட்டுக்கு முன்பே காரைப் பரிசாக வாங்கிய இயக்குநர்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” ஆகும். வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் […]

23/12/2025 Dinesh R
எலக்‌ஷன் விமர்சனம் சினிமா

எலக்‌ஷன் விமர்சனம்

நாயகர்களின் அரசியலை விட்டுவிட்டு நடுத்தர மக்களின் அரசியலை அச்சு அசலாகக் காட்டியிருக்கிறது இந்த எலக்‌ஷன் திரைப்படம். அரசியல், தேர்தல் போன்றவைகளை வெளியில் இருந்து பார்ப்பதற்கும், அதன் அங்கமாக மாறி அதனோடு பயணிப்பதற்குமான வித்தியாசங்களை ஆணித்தரமாகப் பேசியிருக்கிறது எலக்‌ஷன் திரைப்படம். ஜனநாயகத்தின் பலமே இந்தத் தேர்தல் முறையின் மூலம் தங்களைத் ஆளப் போகிறவர்களை மக்கள் தாங்களே தேர்ந்தெடுப்பது தான் என்று நாம் மார்தட்டிக் கொண்டாலும், அப்படி மக்களால் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருக்கிறார்கள்? நல்லவன் என்றோ, நல்லது செய்பவன் […]

18/05/2024 Inbaaraja
சேத்துமான் புகழும், உறியடி விஜயகுமாரும் சினிமா

சேத்துமான் புகழும், உறியடி விஜயகுமாரும்

உறியடி விஜய் குமார், ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார். இப்படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார். கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல், கலந்த குடும்பப் பாங்கான திரைப்படமாகவும், ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு ஒரே கட்டமாகத் தொடர்ந்து 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். […]

12/07/2022 Dinesh R
“சேத்துமான் – ஒரு பரீட்சார்த்த முயற்சி” – இயக்குநர் பா.ரஞ்சித் சினிமா

“சேத்துமான் – ஒரு பரீட்சார்த்த முயற்சி” – இயக்குநர் பா.ரஞ்சித்

நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் சேத்துமான். இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Liv இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இயக்குநர் பா.ரஞ்சித், “சேத்துமான் திரைப்படம் ஒரு திரைப்படமா என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை. அந்தக் கதையை படித்த போது இது ஒரு ஃபீச்சர் ஃப்லிம்மாக இருக்குமா என்கின்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. என்னோட சந்தேகத்தை நான் இப்படத்தின் இயக்குநர் […]

28/05/2022 Dinesh R
சேத்துமான் விமர்சனம் OTT

சேத்துமான் விமர்சனம்

பெருமாள் முருகனின் ‘வறுகறி’ எனும் சிறுகதையை மிக நேர்த்தியாக சேத்துமான் எனும் படமாக உருமாற்றியுள்ளார் இயக்குநர் தமிழ். பன்னியைக் கொங்கு வட்டாரத்தில் சேத்துமான் என்றழைப்பார்கள். கதை நடக்கும் களமாக மேற்கு கொடைக்கானலைத் தெரிவு செய்துள்ளனர். பெயர் போடும் போது ஒரு கதையை ஓவியத்தில் சொல்லி முடித்ததும், டைட்டில் க்ரெடிட் முடிந்த பின் படத்தின் கதைக்குள் செல்கின்றனர். மகனையும் மருமகளையும் இழந்த பூச்சியப்பன் தனது பேரனுடன் ஊரை விட்டு வெளியேறி, பண்ணாடி வெள்ளையனிடம் வேலைக்குச் சேருகிறார். உடல் சூட்டினைத் […]

27/05/2022 Dinesh R