Shadow

Tag: இயக்குநர் தாமிரா

மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் – ட்ரெய்லர்

மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் – ட்ரெய்லர்

OTT, Trailer, Web Series, காணொளிகள்
சத்யராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' எனும் இணைய தொடரின் ட்ரெய்லரை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்டது. இந்தத் தொடர் தவரும் ஆகஸ்ட் 16 முதல், ஒளிபரப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது டிஸ்னி+ ஹாட்ஸ்டார். 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' தொடர், வித்தியாசமான திரைக்கதையுடன், அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' தொடர், எல்லா வயதினரும் ரசிக்கக் கூடிய உணர்வுப்பூர்வமான ரொமாண்டிக் காமெடி சீரிஸாக இருக்கும்.  இயக்குநர் தாமிரா இயக்கியுள்ள, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு, பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார். இந்த சீரிஸினை தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ளார். நடிகர் சத்யராஜுடன் பழம...
ஆண் தேவதை விமர்சனம்

ஆண் தேவதை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முன்னாள் பத்திரிகையாளரான இயக்குநர் தாமிரா, இயக்குநர் இமயத்தையும் சிகரத்தையும் ஒன்றாக நடிக்க வைத்து ரெட்டச்சுழி எனும் படத்தை 2010 இல் எடுத்தவர். எட்டு வருடங்களுக்குப் பிறகு அவர் தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார். சிறகுகள் உதிர வெண்ணிற இறக்கைகள் மேகத்தினூடே பறக்க, ஆண் தேவதை என்ற பெயர் திரையில் வருகிறது. படத்தின் தொடக்கமே, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் பற்றிய சமுத்திரக்கனியின் விளக்கத்தோடு, "தீதும் நன்றும் கற்றுத் தருவோம்"என படம் தொடங்குவது சிறப்பு. அந்தச் சிறப்பு, படம் முழுவதும் நீள்கிறது. எது சரி, எது தவறென விளக்கிக் கொண்டே இருக்கிறார் சமுத்திரக்கனி. ஒரு கட்டத்தில் கடுப்பாகும் நாயகி, "என்னை அட்வைஸ் பண்ணியே கொன்னுடாத!" எனக் கதவை டமாலென மூடுகிறார். நாயகி ரம்யா பாண்டியனும், சமுத்திரக்கனியும் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆதிரா, அகரமுதல்வன் என இரட்டைக...
சமுத்திரக்கனி – ஓர் ஆண்தேவதை

சமுத்திரக்கனி – ஓர் ஆண்தேவதை

சினிமா, திரைத் துளி
ஆண் தேவதையாக நடிக்கிறார் சமுத்திரக்கனி. பெண்தானே தேவதை? இது என்ன 'ஆண் தேவதை' எனத் தலைப்பின் மூலமாகவே யோசிக்க வைக்கின்றனர். இப்படத்தை தாமிரா இயக்குகிறார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மாணவரான இவர், ஏற்கெனவே பாலசந்தர்-- பாரதிராஜா இருவரையும் 'ரெட்டச்சுழி' படத்தில் இணைந்து நடிக்க வைத்தவர். இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை. இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்வொர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது. இப்படிப்பட்ட இன்றைய பரபர சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம். ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? இன்று நிலவும் பொருளாதாரச் சூழலும், கடன் வாங்க...