Shadow

Tag: இயக்குநர் பா.ரஞ்சித்

இரும்புக் கடையின் நீல இசை

இரும்புக் கடையின் நீல இசை

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது, "நீலம் புரொடக்சன் இந்த மாதிரி நிகழ்வுகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனைக் கொண்டுவந்து 'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்க வைத்தாரோ, அதே போல் இரும்புக் கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித். தோழர் அதியன் அவர்களின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். 'இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும்?' என்ற ஆசை எனக்குள் இருந்தது. இப்படத்தை எதைக்கொண்டு தடுத்தாலும் இப்படம் அடைய இலக்கை அடைந்தே தீரும்" என்றார் நடிகை ஆனந்தி, "ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீலம் புரொடக்சன் என் சொந்...
பரியேறும் பெருமாள்: தந்தைக்கான மகனின் காணிக்கை

பரியேறும் பெருமாள்: தந்தைக்கான மகனின் காணிக்கை

சினிமா, திரைச் செய்தி
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் முதல் படம் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம், "பரியேறும் பெருமாள்" இயக்குநர் மாரி செல்வராஜ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கதிர், நடிகை கயல் ஆனந்தி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, லிஜீஸ், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், எடிட்டர் செல்வா ஆர்.கே., கலை இயக்குநர் ராமு, சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் ராம் பேசுகையில், "எனக்கு ஒரு கவிதையில் நான் வாசித்த காட்சி ஞாபகம் வருது. ஒரு தனித்த பனிச்சாலை. ஒரு ஆளற்ற சாலையில் நீள அங்கி போட்ட ஒரு மனிதர் வருகிறார். அவரின் கையில் ஒரு காயப்பட்ட பறவை இருக்கிறது. இரவும் பகலும் அது அழுதுகொண்டே இருக்கிறது. அந்தக் காயப்பட்ட பறவை ஒரு குழந்தையைப் போல இருக்கிறது. அந்த நீள அங்கிப்போட்ட மனிதர் த...
காலா நிகழ்த்தும் வண்ணக்கோலங்கள்

காலா நிகழ்த்தும் வண்ணக்கோலங்கள்

சினிமா
என்னுடைய அண்மைக்கால கொள்கையில் ஒன்றாக, இயன்றளவு கேளிக்கைக்குக் குறைவாகப் பணம் செலவழிப்பது என்று எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். விலையில்லாமலே எவ்வளவோ சிறந்த புத்தகங்களும், நல்ல எழுத்துகளும், தரமான ஆவணப்படங்களும் காணக் கிடைக்கின்ற இக்காலத்தில், ஏனோ நாம் peer pressure-இல் அதிக பணம் செலவழித்து, புதிய படங்களைப் பார்க்க ஓடுகிறோம். அதுவும் ரஜினிகாந்த் போன்ற செல்வாக்கான, பெரும் ஆளுமைகள் நடித்த திரைப்படம் என்றால் நம் ஆவல் கட்டுக்கடங்காமல் பெருகி விடுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் 'காலா' திரைப்படத்தைப் பற்றி நிறைய எதிர்பார்ப்புகள் பெருகி வர, திரைப்படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித்தின் பேட்டிகளும், முந்தைய படங்களும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. 'நான் திரைப்படம் எடுக்க வந்திருப்பதே, நான் நம்பும் கருத்தியலை, பொதுமக்களுக்கான வெளியில் பேசுவதற்காகத்தான்' என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். இதுத...
காலா: ரெளடியா? தலைவரா? – ரஞ்சித்தின் அரசியல்

காலா: ரெளடியா? தலைவரா? – ரஞ்சித்தின் அரசியல்

சினிமா
சுவர் அரசியலைக் கலாபூர்வமாக வழங்கிய ரஞ்சித் எங்கே போனார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. சமூக அறிவுடன் கூடிய கல்வியின் அவசியத்தைச் சொன்ன ரஞ்சித்தால் 'காலா'வில் எதையும் சொல்ல முடியவில்லை. சமூக ஆவேசத்தில் தன்னைத் தொலைத்துக் கொண்ட பரிதாபமான படைப்பாளியாய்த் தெரிகிறார். 'மனு பில்டர்ஸ்' எனப் பெயர் வைப்பதெல்லாம் சரி. ஆனால், அதெல்லாம் name dropping போல் உபயோகிப்படுகிறதே தவிர, காவி அரசியலைக் கழுவி ஊற்றும் குறியீடெல்லாம் இல்லை. இல்லவே இல்லை. படம் நெடுகேவும் காலாவை ஒரு காமெடியனாகவே அணுகுகிறார் ரஞ்சித். மகா பரிதாபம். ஓர் உதாரணத்துடன் பார்க்கலாம். காலா கூட்டத்தில் இருந்து ஆவேசமாக எழுந்து நடக்கும் பொழுது, ஒருவர் ஓடி வந்து அவருக்குக் குடை பிடிக்கிறார். ஆண்டானுக்குச் சாமரம் வீச வேண்டியது அடிமையின் பாக்கியம் என்ற மேட்டிமை எண்ணம் காலாவிற்கு உள்ளதாக ரஞ்சித் சித்தரிக்கிறாரா? காலா எனும் ரெளடியின் மீது மக்களுக்க...
நீலம் புரொடக்சன்ஸின் ‘பரியேறும் பெருமாள்’

நீலம் புரொடக்சன்ஸின் ‘பரியேறும் பெருமாள்’

சினிமா, திரைத் துளி
இயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் பரியேறும் பெருமாள். இயக்குநர் ராம்-இன் இணை இயக்குநரான மாரி செல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 'தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலமாகவும், 'மறக்கவே நினைக்கிறேன்' தொடரின் மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென் தமிழகக் கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாகப் பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அது உருவாக்கும் பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல...
பாம்புசட்டை – சமூகத்தின் மகிழ்ச்சி!

பாம்புசட்டை – சமூகத்தின் மகிழ்ச்சி!

சினிமா, திரைத் துளி
சமீபத்தில் வெளியான பாம்புசட்டை திரைப்படம், ரசிகர்களிடயே வரவேற்பையும் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வசனங்கள் அபாரம் எனக் கொண்டாடப்பட்டாலும் தாமதமான வெளியீடு, வெளியீட்டுப் பிரச்சினை என ஒரு போராட்டத்திற்குப் பின்பே தன் முதல் திரைப்படம் மக்கள் பார்வைக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்கிறார் இயக்குநர் ஆடம் தாசன். இயக்குநர் ஷங்கருடன் எந்திரன், அந்நியன், சிவாஜி படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஆடம் தாசனுக்கு பாம்புசட்டை, இயக்குநராக முதல் திரைப்படம். பாம்புசட்டை படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். அதெப்படி நடந்தது? என் வீடு இருக்கும் தெருவில் தினமும் காலையில் தெருவைச் சுத்தம் செய்து குப்பைகளை அள்ளிச் செல்ல ஒரு இளம்பெண் வருவாள். மிக அழகாக இருப்பாள். அந்தப் பெண்ணுக்கு ஒரு காதல் இர...
கபாலி விமர்சனம்

கபாலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வழக்கமான ரஜினி படம் போல் தொடங்கினாலும், சிறையில் இருந்து வரும் ரஜினி தன் வீட்டுக்குப் போனதும் படம் வேறு பரிமாணத்தைப் பெறுகிறது. முற்றிலும் புது அனுபவத்தைத் தருகிறது. வீட்டின் ஒவ்வொரு மூலையும், அவருக்குத் தன் மனைவியின் ஞாபகத்தை மீட்டெழச் செய்கிறது. அதைத் தாங்கொண்ணாத ரஜினி, தன் பலஹீனத்தை மறைத்தவாறு, டேபிளில் தாளம் போட்டுக் கொண்டே அமீரிடம் தனியாக இருக்கப் பிரியப்படுவதாகச் சொல்கிறார். விடலைத்தனத்துக்கு ஒத்த காதலையே காவியம் போல் வியந்தோதி தமிழ் சினிமா மகிழ்ச்சி அடைந்து கொள்ளும் (ரஜினியின் ‘சிவாஜி’ படம் ஓர் எடுத்துக்காட்டு!) அதுவும் கல்யாணத்துக்கு முன்பான கவர்ச்சியோடு தன்னைச் சுருக்கிக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. ஆனால், நரை கண்ட கபாலிக்கு எப்பொழுதும் தன் மனைவியின் ஞாபகம்தான். ‘தன் மனைவி உயிரோடு இருக்கிறாளா இல்லையா?’ என்பதே தெரியாமல், கபாலியாக ரஜினி காட்டும் சங்கடமும் வேதனையும் மிக அற்புதம். ரஜி...