Shadow

Tag: உறியடி விஜயகுமார்

எலக்‌ஷன் விமர்சனம்

எலக்‌ஷன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகர்களின் அரசியலை விட்டுவிட்டு நடுத்தர மக்களின் அரசியலை அச்சு அசலாகக் காட்டியிருக்கிறது இந்த எலக்‌ஷன் திரைப்படம். அரசியல், தேர்தல் போன்றவைகளை வெளியில் இருந்து பார்ப்பதற்கும், அதன் அங்கமாக மாறி அதனோடு பயணிப்பதற்குமான வித்தியாசங்களை ஆணித்தரமாகப் பேசியிருக்கிறது எலக்‌ஷன் திரைப்படம். ஜனநாயகத்தின் பலமே இந்தத் தேர்தல் முறையின் மூலம் தங்களைத் ஆளப் போகிறவர்களை மக்கள் தாங்களே தேர்ந்தெடுப்பது தான் என்று நாம் மார்தட்டிக் கொண்டாலும், அப்படி மக்களால் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருக்கிறார்கள்? நல்லவன் என்றோ, நல்லது செய்பவன் என்கின்ற நம்பிக்கையைப் பெற்ற ஒருவனோ, இந்தத் தேர்தல் நடைமுறைகளின் வழி மக்களின் தலைவன் ஆகிவிட முடியுமோ என்று கேட்டால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதே சத்தியமான பதில். அதைத்தான் இந்த எலக்‌ஷன் பேசி இருக்கிறது. நாற்பது ஆண்டு காலம் கட்சிக்காக நாயாக உழ...
சேத்துமான் புகழும், உறியடி விஜயகுமாரும்

சேத்துமான் புகழும், உறியடி விஜயகுமாரும்

சினிமா, திரைத் துளி
உறியடி விஜய் குமார், ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பைத் துவங்கியுள்ளார். இப்படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார். கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல், கலந்த குடும்பப் பாங்கான திரைப்படமாகவும், ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு ஒரே கட்டமாகத் தொடர்ந்து 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். '96 படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். C.S.பிரேம் குமார் படத்தொகுப்பாளராகவும், ஸ்டன்னர் சாம் சண்டைப் பயிற்சியாளராகவும், ஏழுமலை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனங்...
உறியடி விஜய்குமாரின் ஆக்சன் படம்

உறியடி விஜய்குமாரின் ஆக்சன் படம்

சினிமா, திரைத் துளி
உறியடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜய்குமார் நடிப்பில் தயாராகி வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்து வரும் புதிய ஆக்சன் படத்தை அறிமுக இயக்குநர் அப்பாஸ் அ. ரஹமத் இயக்குகிறார். 'உறியடி' படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகனாக நடித்த நடிகர் இயக்குநர் விஜய்குமார் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதனிடையே நடிகர் விஜய்குமார் நடித்த 'உறியடி 2' படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்தது என்பதும், 'சூரரைப் போற்று' படத்தின் வசனத்தை விஜய்குமார் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது....