32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

உறியடி விஜய்குமாரின் ஆக்சன் படம்

Dinesh R சேலம் Published: 02/07/2022 1 நிமிட வாசிப்பு Updated: 11/07/2022 சினிமா
எழுத்து அளவு:

உறியடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜய்குமார் நடிப்பில் தயாராகி வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்து வரும் புதிய ஆக்சன் படத்தை அறிமுக இயக்குநர் அப்பாஸ் அ. ரஹமத் இயக்குகிறார். ‘உறியடி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகனாக நடித்த நடிகர் இயக்குநர் விஜய்குமார் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே நடிகர் விஜய்குமார் நடித்த ‘உறியடி 2’ படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்தது என்பதும், ‘சூரரைப் போற்று’ படத்தின் வசனத்தை விஜய்குமார் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.