Shadow

Tag: ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி

கனெக்ட் விமர்சனம்

கனெக்ட் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மாயா, கேம் ஓவர் முதலிய படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள பேய்ப்படம். ரெளடி பிக்சர்ஸ் சார்பாக இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். ஆன்னாவின் தந்தையான மருத்துவர் ஜோசஃப், கொரோனா காலத்தில் இறந்து விட, தன் தந்தையுடன் பேசவேண்டுமென்ற ஆசையில் ஒயிஜா போர்டின் உதவியோடு, ஆவியுலகத்தைத் தொடர்பு செய்ய முயல்கிறார். அந்தத் தொடர்பை உருவாக்கும் முயற்சி தவறுதலாகி (Wrong connection), தீங்கு விளைவிக்கும் கடவுளுக்கெதிரான சாத்தான் ஆன்னாவின் உடலில் ‘கனெக்ட்’ ஆகி விடுகிறது. அந்த சாத்தான் தனியாக ‘கனெக்ட்’ ஆகாமல் கொரோனாவயும் அழைத்து வந்து விடுகிறது. லாக்டவுனில், அதிலும் குறிப்பாக க்வாரென்டெயினில் மாற்றிக் கொள்ளும் நேரத்தில், அந்த துர் ஆவியை தன் மகளின் உடலிலிருந்து டிஸ் கனெக்ட் செய்ய, ஆன்னாவின் அம்மா சூசன் எப்படிப் போராடுகிறார் என்பதே பட்த்தின் கதை. சிறுமி ஆன்னாவுக்கும், அவளது தந்தைக்குமான பாசம்தான் கத...
செத்தும் ஆயிரம் பொன் விமர்சனம்

செத்தும் ஆயிரம் பொன் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
ஏப்ரல் 1 அன்று, நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள படம். சிறு வயதிலேயே ஊரை விட்டுப் போய்விடும் மீரா, தன் பாட்டி கிருஷ்ணவேனியைப் பார்க்க வேண்டாவெறுப்பாக ஆப்பனூர் எனும் கிராமத்திற்கு வருகிறாள். அவர்கள் உறவுக்குள் என்ன சிக்கல், அது எப்படி நகர்கிறது என்பதுதான் படத்தின் கதை. என்றாலும், ஒருவரின் மரணத்தை ஆப்பனூர் மக்கள் எப்படி அணுகுகின்றனர் என்பது கதையோடு பின்னிப் பிணைந்த இழையாக வருகிறது. இந்த இழை தான் படத்தின் தனித்துவத்திற்கும் சிறப்பிற்கும் காரணம். ஜில் ஜங் ஜக் படத்தில், ஜக்-காக நடித்திருந்த அவினாஷ் ரகுதேவன், ஒப்பனைக் கலைஞன் குபேரனாக நடித்துள்ளார். இறந்தவர்களைக் குளிப்பாட்டி, அரிதாரம் (சாயம்) பூசி, நாற்காலியில் இறந்தவரைஅலங்காரத்துடன் ஜம்மென்று உட்கார வைக்கும் கலைஞன். இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்யும் ஓர் ஆத்மார்த்தமான கர்வம் குபேரனிடம் எப்பொழுதும் இருக்கும். தான் செய்த தவறைப் பொதுவி...