Shadow

Tag: கயாடு லோஹர்

இதயம் முரளி விமர்சனம் | Idhayam Murali review

இதயம் முரளி விமர்சனம் | Idhayam Murali review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘இதயம்’ எனும் படம், 1991 இல் வெளியாகி அந்தக் கால இளைஞர்களின் இதயங்களை வென்றது. மறைந்த நடிகர் முரளியின் திரைவாழ்வில் ஒரு மைல்கல் அப்படம். அப்படத்தின் நாயகனின் குணாதிசயத்தைக் கதைக்கருவாகக் கொண்டு அதர்வாவை வைத்து இதயம் முரளியாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன். 90’ஸ் கிட்ஸ் அதர்வாவிற்கு சிறுவயது பெண்களிடம் காதலைச் சொல்வதற்கு தயக்கம். அந்த தயக்கமே அவரின் காதல்களுக்குத் தடையாக மாறுகிறது. பள்ளிவாழ்வில் பாடமெடுக்கும் மிஸ்ஸிடம் காதலைச் சொல்லத் தவறுகிறான். அதன்பின் பருவ வயதில் ட்யூஷன் ஜோடியான ப்ரீத்தி முகுந்தனிடம் காதலைச் சொல்லாமல் அந்தக் காதலையும் தவறவிடுகிறார். முத்தாய்ப்பாக இளைஞர்களின் கனவு நாயகியான கயாடு லோகரிடம் காதல் சொல்லும் வாய்ப்பு வருகிறது. அதையும் தவறவிடுகிறார். ஒரு கட்டத்தில் துணிச்சலை வர வைத்துக் காதலைச் சொல்லச் செல்கிறார் அதர்வா. ஆனால் காதலிகள் என்ன நிலையிலிருந்தார்கள் எ...
கயாடு லோஹரின் பள்ளிச்சட்டம்பி

கயாடு லோஹரின் பள்ளிச்சட்டம்பி

இது புதிது
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி (Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' எனும் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது நடிகையின் கதாபாத்திரத்தைச் சித்தரிக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.படத்தில் அவரது கேரக்டரின் பெயரைப் படக்குழுவினர் போஸ்டரில் வெளியிடவில்லை. கன்னடத் திரைப்படமான 'முகில்பேட் (Mugilpete)' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு, 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தைக் கவர்ந்தது. பின்னர் கடந்த ஆண்டு வெளியான டிராகன் எனும் தமிழ்த் திரைப்படம், அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பள்ளிச்சட்டம்பி - கயாடு லோஹரின் மூன்றாவது மலையான திரைப்படமாகும். துல்கர் சல்மான் நடிக்கும் 'ஐ எம் கேம்' படத்தில...
DRAGON விமர்சனம்

DRAGON விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திரையரங்கில் பார்க்க வேண்டிய ஜாலியானதொரு படம். கெட்டவனாகப் பொறுக்கியாக இருந்தால்தான் கெத்து என கல்லூரியில் அரியர் வைப்பதைப் பெருமையாக நினைக்கிறான் D.ராகவன். அதன் பலனாக வாழ்க்கை அவனை எப்படிலாம் புரட்டுகிறது என்பதுதான் படத்தின் கதை. லவ் டுடே படத்திற்குப் பிறகு, மற்றுமொரு வெற்றிப்படத்தில் தன்னை அழகாகப் பொருத்திக் கொண்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன். படத்தின் முதற்பாதியில் ஏகத்திற்கும் சிகரெட் பிடிக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ஐடியில் இணைந்த பின், பசங்களிடம் ஒரு பளபளப்பும் மினுமினுப்பும் ஏற்படும். ஒரு கோடி ரூபாய்க்கு வீடு, ஒளடி கார் வாங்கினாலும், உருப்படாமல் இருந்த பொழுது எப்படி இருந்தாரோ அப்படியே அவரைக் காட்டுகின்றனர். நல்லவேளையாகப் புறத்தில் மட்டுமே அப்படி, அகத்தில் அவரிடம் ஏற்படும் மாற்றமே படத்தை மிகவும் அழகாக்கியுள்ளது. கீர்த்தியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். வழக்கமான படமாக மாறிவிடாமல் பட...