Shadow

Tag: கரும்புனல் நாவல்

மனச்சுரங்கத்தை உழும் ‘கரும்புனல்’

மனச்சுரங்கத்தை உழும் ‘கரும்புனல்’

புத்தகம்
இந்தியாவின் அச்சுறுத்தும் முகத்தினைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ராம்சுரேஷ். பீஹாரிலுள்ள கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் தான் கதையின் களம். 1995 இல் நடப்பதாகக் கதை நகர்கிறது. 35 அத்தியாயங்கள் உடைய நாவல் என்றாலும், எந்த அத்தியாயமும் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் உள்ளது. முன்னுரை, என்னுரை நீங்கலாக 214 பக்கங்கள் கொண்ட நாவலை ஒரே மூச்சில் படிக்க முடிவதுதான் ராம்சுரேஷ் எழுத்தின் சிறப்பு. நாவலின் சரளமான flow-க்குக் காரணம், அவரது நினைவோடைகளில் சாம்பல் படிவமாய்ப் படிந்திருந்த அனுபவங்களைத் தூசி தட்டி புனைவாக்கியுள்ளார். கரும்புனல் என்ற தலைப்பு எவ்வளவு கச்சிதமாகப் பொருந்துகிறது என நாவலை முடித்ததுமே தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. செய்திகளிலும், செவி வழியாகவும் நாம் கேள்விப்படும் பீஹார், ஏன் அவ்வாறு இருக்கிறது என்பதற்கான விடையை நாவல் முன்வைக்கிறது. ஜார்க்கண்ட்டாக பீஹா...