Shadow

Tag: காளி வெங்கட்

எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நண்பனுக்காக எந்தச் சிரமத்தையும் மேற்கொள்ளும் நண்பர்களைச் செல்லமாக 'அடிமைகள்' என்கிறார் இயக்குநர். அப்படி, ஐ.டி.யில் வேலை செய்யும் ஜெய்க்கு மூன்று அடிமைகள் உள்ளனர். அவர்கள், வங்கியில் கேஷியராக உள்ள கருணாகரன், ஷேர் ஆட்டோ ஓட்டும் காளி வெங்கட், கஸ்டமர் கேரில் வேலை செய்யும் நவீன் ஆகியோர் ஆவர். காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார் ஜெய். அவரைத் தேடித் தடுக்க முயற்சி செய்யும் அவரின் 3 அடிமைகளுமே அநாவசிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். அடிமைகளை எப்படிப் பிரச்சனையில் இருந்து ஜெய் மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் நாயகன் நாயகி பெயரளவிற்குத்தான். கருணாகரனும், காளி வெங்கட்டும்தான் படத்தின் உண்மையான நாயகர்கள். ஷேர் ஆட்டோ பின்னால் சென்று ரத்தம் சூடேறுபவர்களுக்கு, காளி வெங்கட்டின் அறிமுக காட்சி மிக நெருக்கமாக அமையும். காளி வெங்கட்டின் கதாபாத்திரத்தை அனுபவித்து எழுதிய...
ராஜா மந்திரி விமர்சனம்

ராஜா மந்திரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சூர்யா, கார்த்தி என பாசமிகு சகோதரர்கள் வாழ்க்கையில் நேரும் காதல் - கல்யாணக் குளறுபடிகள் தான் படத்தின் கதை. கல்யாணம் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் முதுமகன் (30 வயதைக் கடந்த ஆண்) சூர்யாவாக காளி வெங்கட். அவருக்குத் தம்பியாக கலையரசன் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தாலும், காளி வெங்கட்டுக்கே படத்தின் நாயகன் என்ற அந்தஸ்த்தைத் தர முடியும். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில், ‘எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே!’ எனத் தொடங்கும் பாடலுக்கு காளி வெங்கட் காட்டும் முக பாவனைகள் அலாதியாக உள்ளது. படமும் அவரை மையப்படுத்தியே நகர்கிறது. எதிர் வீட்டுப் பெண்ணான மகாலட்சுமியாக நடித்திருக்கும் வைஷாலியிடம் அவர் வழிவதெல்லாம் ரசிக்கும்படியாக உள்ளது. காதலிக்கப்பட மட்டுமே என்றாலும், வைஷாலி அதிகமாக ஈர்க்கிறார். அத்தகைய ஈர்ப்புக்கு, அவர் லூசுப் பெண்ணாகச் சித்தரிக்கப்படாதது காரணமாக இருக்கலாம். அதை விடக் குறிப்பாக, எவ்விதப் ...
டார்லிங் – II விமர்சனம்

டார்லிங் – II விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐந்து நண்பர்கள் ஒரு மாளிகையில் பேயிடம் சிக்கிக் கொள்வதால், 'ஜின்' எனப் பெயரிடப்பட்ட படம் 'டார்லிங்-II' ஆனது. படத்தை ஸ்டுடியோ க்ரீன் வாங்கியது தலைப்பு மாற்றதுக்கான பிரதான காரணம். இயக்குநரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமிது. ஒரு விளையாட்டுத்தனம் எப்படி விபரீதம் ஆகிறது என்பதுதான் படத்தின் கதை. 'காற்றில் ஒரு' என்ற பாடலுடன் தொடங்குகிறது படம். அந்தப் பாடல், படத்தைப் பற்றிய முழுப் பிம்பத்தை அளிப்பதோடு, மனப்பிழற்வுக்கு உள்ளாகும் ஒரு இளம்பெண்ணுடைய குடும்பத்தின் மனநிலையையும், குறிப்பாக உடைந்து போகும் அவள் தந்தையின் நிலை குறித்தும் அழகாகப் பதிந்துள்ளது. பீட்சா படத்தில், 'பீட்சா ஷாப்' ஓனரான நரேனும் இதே போன்றதொரு பரிதவிப்பில்தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. டார்லிங் படத்தில், பேயின் அட்டகாசத்திற்குப் பின் ஒரு வலுவான காரணம் முன் வைக்கப்பட்டது. பட...
மிருதன் விமர்சனம்

மிருதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிருதம் - பிணம்; மிருதன் - பிணமாய் வாழ்பவன் (ஜோம்பி) ஒரு வைரஸால் மனிதர்கள் மிருதர்களாக உருமாறுகின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அமைச்சராக வரும் R.N.R. மனோகர், அவரது அறிமுகக் காட்சியைத் மற்ற காட்சிகளில் எல்லாம் அதகளப்படுத்துகிறார். செக் போஸ்ட்டில் அவர் கெத்து காட்டி விட்டு, ஜெயம் ரவியைப் பார்த்து, "இதுக்குத்தான் தம்பி அரசியலில் கொஞ்சம் டச் வேணுங்கிறது" எனும் பொழுது திரையரங்கம் சிரிப்பொலியால் அதிர்கிறது. அதே போல், காளி வெங்கட்டின் சுடும் திறமைக்கும் சிரிப்பொலி எழுந்து அடங்குகிறது. ட்ராஃபிக் போலிஸ் கார்த்தியாக ஜெயம் ரவி ஜம்மென்று இருக்கிறார். வழக்கமான தமிழ் சினிமா அண்ணன் தான் என்றாலும், தங்கை அனிகாவின் (என்னை அறிந்தாலில் த்ரிஷாவின் மகள்) க்யூட்னெஸால் அதுவும் ரசிக்கும்படி இருக்கிறது. மிருதர்கள் சுடப்படும் பொழுது, அவர்கள் வெறும் நோயாளிகள் என்று பரிதாபப்படும் மருத்துவர் ரேனுகா, க்ளைமே...