Shadow

Tag: சாய் அபயங்கர்

டியூட் விமர்சனம் | Dude review

டியூட் விமர்சனம் | Dude review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
"தாலி முக்கியமில்லையா?""இல்ல. அதுக்குப் பின்னாடி இருக்கிற பொண்ணோட மனசுதான் முக்கியம்." Z தலைமுறையினருக்கான ஒரு கொண்டாட்டமான படத்தில், புனிதமென சினிமா அடைகாத்து வந்த தாலி சென்ட்டிமென்ட்டைச் சுக்குநூறாக அறுத்தெறிந்து விட்டுள்ளார் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன். படத்தின் முதல் காட்சியே, நாயகன் தனது முன்னாள் காதலியின் திருமணத்திற்குப் சென்று கோபாவேசத்தில் யதேச்சையாக அவளது தாலியை அறுத்துவிடுகிறான். அவனை அடி வெளுத்து விடுகின்றனர். படம் இப்படி நகைச்சுவையாகத் தொடங்கினாலும், படம் மிக அழுத்தமாகத் தமிழ் சினிமா வியந்தோதி வந்த தாலி சென்ட்டிமென்ட்டை அடி வெளுத்துள்ளது. அந்த 7 நாட்கள் அம்பிகா, சின்ன தம்பி குஷ்பு, புதுப்பேட்டை சோனியா அகர்வால் என இந்த தாலி பல பெண்களைக் காவு வாங்கியுள்ளது. நாயகன் அணிவிக்கும் ஐடி கார்டைப் தாலியாகப் பாவித்துக் கண்ணில் ஒத்திக் கொள்ளும் முன்னாள் காதலி, கல்யாணத்திற்குப் பின...
பல்டி விமர்சனம்

பல்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மெட்ராஸ்காரன் படத்துக்குப் பிறகு ஷேன் நிகாம் தமிழில் மீண்டும் நடித்திருக்கும் படம் பல்டி. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். சாந்தனு, செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் தான் சாய் அபயங்கர் இசையில் வெளியாகும் முதல் திரைப்படமாகும். தமிழக, கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் ஷேன் நிகம், சாந்தனு மற்றும் இரண்டு நண்பர்கள் கபடி வீரர்களாவர். பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி குழுவில் விளையாடி வெற்றிகளைக் குவிக்கிறார்கள். அதே பகுதியில் விதவிதமான வட்டித் தொழில் செய்து வரும் மூன்று கேங்குகள் இடையே கடும் தொழில் போட்டி நிலவுகிறது. செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் பூர்ணிமா இந்த மூன்று கேங்குமே ஒருவரை ஒருவர் அழிக்கக் காத்திருக்கின்றனர். ஒரு கட்டத்த...