Shadow

Tag: சிம்ம வாகனி

தொட்டுத் தொடரும் வன்மம்

தொட்டுத் தொடரும் வன்மம்

அயல் சினிமா, சினிமா
நாடு, மொழி, இனம், சாதி என எந்தவித பாரபட்சமும் பார்க்காத ஒன்று இருக்கிறது என்றால் அதுதான் பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை. இத்தகைய வன்முறைகள் நடக்காத நாடும் இல்லை, நாளும் இல்லை.15ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டுக்கு இடைப் பட்ட காலத்தில் சூனியக்காரிகள் என அடையாளப்படுத்தப்பட்டு கொல்லப் பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். ஐரோப்பாவில் தான் இத்தகைய கொடூரச் செயல் மதத்தின் பெயரால் பெரிய அளவில் நிகழ்த்தப் பட்டது. பொதுவில் உலகம் முழுவதுமே சூனியக்காரிகள் என சந்தேகப்பட படும் பெண்களின் நிலை அவலமும், துயரமுமானது.இன்றும் ஆஃப்ரிக்காவில் பெண்களுக்கு எதிராக இத்தகைய கொலைகள் வாடிக்கையாக இருப்பது கவலை தரும் செய்தி.சூனியக்காரிகள் என சந்தேகப்படுபவர்களைக் கொல்வது ஒரு சடங்காகவே பாவிக்கப்பட்டது. அவர்களை எங்கு, எப்படிக் கொல்ல வேண்டும் என வழிகாட்டும் ஒரு புத்தகமே லத்தீன...
அந்தி நேர சாயை – 3

அந்தி நேர சாயை – 3

கதை, படைப்புகள்
அந்தி நேர சாயை - 2என் பெயர் சுதன். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இந்த ஊர்ல தான். நான், எங்கம்மா.. இவ்ளோ தான் என் உலகம். ஆனா உலகம் ரொம்ப பெருசு இல்ல!! அப்ப என்னோட அழகான சின்னக் கூடுன்னு சொல்லிக்கலாம் தான? இந்தக் கூட்டுல யாரோ கல் எறிஞ்ச மாதிரி எங்கம்மாக்கு கிட்னி ஃபெய்லியர் ஆயிடுச்சு. அவங்க காலுலாம் வீங்க ஆரம்பிச்சுது. பெருசா அவங்க கண்டுக்கல. நாள் ஆக ஆக சோர்வு அதிகமாயி உடம்புக்கு முடியாம படுத்துக்கிட்டே இருந்தாங்க. உள்ளூர் வைத்தியர் மருந்துக்கு சரி படல. ஏழு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போனோம். ஒரு கிட்னி சுத்தமா செயலிழந்துடுச்சுன்னும், இன்னொன்னு பலவீனமா இருக்குன்னு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி டாக்டர் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துட்டு சொன்னாரு. உடனே தனியார் ஆஸ்பத்திரில சேர்த்தோம். பலவீனமா இருக்கிற கிட்னி கொஞ்ச நாள் தான் தாங்கும் என சொல்லிட்டாங்க. எவ்ளோ சீக்கிரம் முட...
அந்தி நேர சாயை – 2

அந்தி நேர சாயை – 2

கதை, படைப்புகள்
அந்தி நேர சாயை - 1முதல்ல இந்த ஊருக்கு வெளியில் இருக்கிற பெரிய பெரிய மரத்தை எல்லாம் வெட்டணும். இல்லன்னா பேய் இருக்கு, பிசாசு இருக்குன்னு கதைய கிளப்புறவங்க நாக்க வெட்டணும். வீட்டுத் தோட்டத்துல பயமுறுத்திக்கிட்டு இருந்த பேயெல்லாம் டார்ச்-லைட் வந்தப்புறம் இந்த மாதிரி ஊருக்கு வெளியில இருக்கிற பெரிய மரத்துக்கு குடி வந்துடுச்சுன்னு எங்க தாத்தா விளையாட்டா சொல்வார். சரி தான். பேய்ன்னு தனியா ஏதாச்சும் இருக்கா என்ன? மனசுல இருக்கிற பயத்துக்கு பேர் தான் பேய். இந்த ஊர்க்காரங்க தான் சொல்றாங்கன்னா கேசவுக்கு புத்தி எங்க போச்சுன்னு தெரில. கப்பூரார் மனைவி தான் அவர கொன்னாங்களாம். கொல்றவங்களா இருந்தா ஏன் இவ்ளோ நாளுக்கு அப்புறம் கொல்லணும்? அதுவும் 300 கிலோ மீட்டர் தாண்டி வந்து இந்த ஊர்ல தான் கொல்லணுமா?ஊருக்குள்ள வர்றப்பவே கேசவ் சொன்ன மரம் எதுன்னு சுலபமா கண்டுபிடிக்க முடிஞ்சது. ரொம்ப பெரிய மரம் தான். நின...
அந்தி நேர சாயை – 1

அந்தி நேர சாயை – 1

கதை, படைப்புகள்
எப்பவுமே தூங்காத ஆளை நீங்க எங்கயாச்சும் பார்த்திருக்கீங்களா? கப்பூரார் அப்படித் தான். கப்பூரார எங்க வீட்டு சமையற்காரர்னு சொல்லலாம். ஆனா அவர் என்னோட சமையற்காரர் மட்டும் தான். என்னோட 4 வயசுல நான் சாப்ட்டது ஏதோ பாய்சன் ஆகி சாகற ஸ்டேஜுக்கு போயிட்டேனாம். அதுக்கு அப்புறம் என் சாப்பாடு மாறிடுச்சு. ஏகப்பட்ட பத்தியம். எது சாப்டாலும் சுத்த பத்தமா இருக்கணும்னுட்டு.. கலப்படம் இல்லாத சமையல் பொருள வாங்க ஒரு ஆளுயும், அதை சமைக்கறதுக்கு கப்பூராரயும் தாத்தா புதுசா வேலைக்கு வச்சாரு. இப்ப தாத்தா இல்ல. ஆனா அந்தக் குறை எனக்கில்லாததுக்கு கப்பூரார் தான் காரணம். அப்பாவ விட பத்து பதினைஞ்சு வயசு அதிகமா இருக்கும். அவரோட பெயர் நாராயணன்னு நினைக்கிறேன். அவர் ஊர்ப் பெயரைச் சொல்லி சொல்லி.. அதே பழக்கம் ஆயிடுச்சு எங்க வீட்டுல.கப்பூராருக்கு எங்கள விட்டா யாரும் இல்ல. அவருக்கு பதினேழு பதினெட்டு வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு. ...