
இதயம் முரளி விமர்சனம் | Idhayam Murali review
‘இதயம்’ எனும் படம், 1991 இல் வெளியாகி அந்தக் கால இளைஞர்களின் இதயங்களை வென்றது. மறைந்த நடிகர் முரளியின் திரைவாழ்வில் ஒரு மைல்கல் அப்படம். அப்படத்தின் நாயகனின் குணாதிசயத்தைக் கதைக்கருவாகக் கொண்டு அதர்வாவை வைத்து இதயம் முரளியாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்.
90’ஸ் கிட்ஸ் அதர்வாவிற்கு சிறுவயது பெண்களிடம் காதலைச் சொல்வதற்கு தயக்கம். அந்த தயக்கமே அவரின் காதல்களுக்குத் தடையாக மாறுகிறது. பள்ளிவாழ்வில் பாடமெடுக்கும் மிஸ்ஸிடம் காதலைச் சொல்லத் தவறுகிறான். அதன்பின் பருவ வயதில் ட்யூஷன் ஜோடியான ப்ரீத்தி முகுந்தனிடம் காதலைச் சொல்லாமல் அந்தக் காதலையும் தவறவிடுகிறார். முத்தாய்ப்பாக இளைஞர்களின் கனவு நாயகியான கயாடு லோகரிடம் காதல் சொல்லும் வாய்ப்பு வருகிறது. அதையும் தவறவிடுகிறார். ஒரு கட்டத்தில் துணிச்சலை வர வைத்துக் காதலைச் சொல்லச் செல்கிறார் அதர்வா. ஆனால் காதலிகள் என்ன நிலையிலிருந்தார்கள் எ...

