Shadow

Tag: தம்பி ராமையா

பைரவா விமர்சனம்

பைரவா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பொங்கலுக்கு ஒரு படம், நாயகன் விஜயின் கணக்கில் வரவு வைக்கவேண்டுமென்ற ஆவலில் உருவாகியுள்ள படம். தீமையை எதிர்த்து ஒற்றை ஆளாய்ப் போராடி, பைரவா வாகை சூடுவதுதான் படத்தின் கதை. வில்லனாகப்பட்டவர் கல்வித் தந்தை, நாயகி மருத்துவம் படிக்கும் மாணவி, விஜய் மாஸ் ஹீரோ என்பதை முதல் பாதியில் நீட்டி முழக்கியும், வில்லனை நாயகன் எப்படி வீழ்த்துகிறார் என்பதை இரண்டாம் பாதியிலும் சொல்லியுள்ளனர். சுவாரசியமோ, புதுமையோ, திருப்பமோ அற்ற திரைக்கதையின் நீளம் சற்றே அதிகம். விஜய் அழகாக, அசத்தலாக, இளமையாகத் துள்ளலோடு படம் நெடுகே வருகிறார். நாயகனின் அறிமுகம் தான் மாஸ் ஹீரோ படத்தின் டோனை செட் செய்ய உதவுவது. மிகப் பரிதாபகரமாக அதில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர் பரதன். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்குத் தகுந்தபடி 'மாஸ்' எனும் விஷயம் முழுப் படத்திலுமேயே மிஸ்ஸிங். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் சோபிக்கவில்லை. மர...
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் விமர்சனம்

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விருமாண்டியும் சிவனாண்டியும் முறையே இரண்டு ஊரின் தலைக்கட்டுகள். அந்த இரண்டு ஊர்களுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஆனால், படம் அந்த ஊர்களைப் பற்றியோ, அந்தப் பிரச்சனையைப் பற்றியோ, அந்தத் தலைக்கட்டுகள் பற்றியோ அல்ல. படத்தின் தலைப்புக்கு மட்டுமே காரணமாக உள்ள கதாபாத்திரங்கள் அவர்கள். 50 வயதாகும் தம்பி ராமையா, ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில் ஒரு லைவ் குறும்படம் எடுத்துச் சாதிக்க நினைக்கிறார். அதன்படி, பிசினஸ் செய்ய நினைக்கும் அறிமுக நாயகன் சஞ்சயை ஏமாற்றி தன் படத்தில் நடிக்க வைத்து, நாயகி அருந்ததி நாயருக்குத் தெரியாமல் கேண்டிடாக ஷாட்கள் எடுத்துப் படத்தை முடித்து விடுகிறார். நாயகியோ விருமாண்டியின் மகள். பிரச்சனை பெரிதாகி நாயகனின் குடும்பமே சிக்கலில் மாட்டிக் கொள்கிறது. பிறகு என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. புதுமுகம் சஞ்சய் நன்றாக நடனம் ஆடுகிறார்; நடிக்கவும் செய்கிறார். அதிகம்...
தொடரி விமர்சனம்

தொடரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தொடரியில் (ட்ரெயின்) உணவு விற்பவரான பூச்சியப்பனுக்கு, தொடரியில் பயணிக்கும் நடிகை ஸ்ரீஷாவின் டச்-அப் பெண்ணான சரோஜா மீது கண்டதும் காதல் வருகிறது. அந்தத் தொடரியின் ஓட்டுநர் இறந்து விடுவதால், நிறுத்துவாரின்றி தொடரி தறி கெட்டு ஓடுகிறது. தொடரி எப்படி நின்றது என்றும் பூச்சியப்பன் சரோஜா காதல் என்னானது என்பதே படத்தின் முடிவு. சதா ஃபோனில் தொணத்தொணத்துத் தொந்தரவு செய்யும் ஒரு மனைவியின் குரல் படத்தில் ஒலிக்கிறது. அப்படித் தொணத்தொணப்பவர் அசிஸ்டென்ட் லோகோமோட்டிவ் பைலட்டின் (ALP) மனைவி. ஏ.எல்.பி. விதிகளை மீறி வேலை நேரத்தில் ஃபோனை அணைக்காததோடு குடிக்க வேற செய்கிறார். ஒருவரின் பொறுப்பற்றத்தனம் சுமார் 700 சொச்சம் பயணிகளின் உயிர்களைக் கேள்விகுறியாக்குகிறது. ஏ.எல்.பி.யின் நிலைக்குக் காரணம் அவருக்கு வரும் மனைவியின் ஃபோன் என்பதாகக் காட்டப்படுகிறது. இயக்குநர் பிரபு சாலமன், மைனா படத்தின் சிறை அதிகாரியின் மனைவியை...
இருமுகன் விமர்சனம்

இருமுகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லவ் எனும் தீவிரவாதி அன்பே இல்லாமல், தனது ‘ஸ்பீட்’ எனும் அண்ணீர் (adrenaline) ஊக்கி மருந்தை, உலகின் பயங்கரவாதக் குழுக்களுக்கு வினியோகம் செய்யத் திட்டமிடுகிறான். அதை உளவுத்துறை ரா (RAW) அதிகாரியான அகிலன் வினோத் முறியடிக்க முனைகிறார். நல்லவன் தீயவன் ஆகிய இந்த இரண்டு முகத்துக்கு (பேர்) இடையே நிகழும் சண்டை தான் படத்தின் கதை. ஸ்டைலிஷான ஹீரோ, மிக ஸ்டைலிஷான வில்லன் என இரண்டு வேடங்களில் வருகிறார் விக்ரம். லவ் எனும் பாத்திரத்தில் அவர் காட்டும் நளினமும் பாவனைகளும் ரசிக்க வைக்கின்றன. ஹாலிவுட் நாயகர்களைப் போலவே, ‘ஃபைட் கிளப்’ ஒன்றில் தாடியுடன் விக்ரம் அசத்தலாய் அறிமுகமாகிறார். அங்குத் தொடங்கி இடைவேளையில் வரும் ‘ட்விஸ்ட்’ வரை படம் மிக விறுவிறுப்பாய்ப் பயணிக்கிறது. அகிலன் பாத்திரத்தின் முரட்டுத்தனமான உடல்வாகிற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறார் விக்ரம். அகிலன் தாடியை எடுத்ததும், முகத்தில் கொஞ்சம் வயோதிகம்...
வெற்றிவேல் விமர்சனம்

வெற்றிவேல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சுந்தர பாண்டியன், பிரம்மன் என நண்பர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மனிதர், வெற்றிவேலாக மாறி, தன் தம்பியின் காதலுக்காக எந்த எல்லைக்குப் போகிறார் என்பதே படத்தின் கதை. நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் இளவரசுவும், நாட்டுச்சாலை பிரசிடெண்ட்டாக நடித்திருக்கும் பிரபுவும் தான் கதையின் நாயகர்கள். ஆனால், படத்திற்கு உயிரூட்டியுள்ளதோ விஜி சந்திரசேகர் மட்டும்தான். ‘நாங்க இருக்கும் வரை காதல் சாகாது’ என நாடோடிகள் குழு விஜய் வசந்த், பரணி ஆகியோருடன் சமுத்திரக்கனியும் இறங்கி அதகளப்படுத்துகிறார். படத்தின் பலம் அதன் துணை நடிகர்கள் என்றே சொல்லவேண்டும். சசிகுமாரின் தம்பியாக ஆனந்த் நாக் நடித்துள்ளார். நாயகனின் அறிமுகத்தை விட இவரது அறிமுகம் நன்றாக இருப்பதோடு, கதையோடும் பொருந்தியும் வருகிறது. சசிகுமாரின் நடனம் ப்பாஆஆ..! மலையாளி ஜனனியாக மியா ஜார்ஜ். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, நிகிலா விமலுக்கு வழிவிட்டு ...
புலி விமர்சனம்

புலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருதீரனின் காதலியைக் கடத்தி விடுகின்றனர் வேதாளபுரத்தின் வீரர்கள். பலம் பொருந்திய வேதாளர்களிடமிருந்து மருதீரன் தன் காதலியை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. மருதீரன், புலிவேந்தனும் என இரண்டு வேடங்களில் விஜய். விஜய்யின் வழக்கமான நடிப்பில் மருதீரனும், ‘மக்களுக்காக சந்தோஷமா சாவேன்’ என அடித் தொண்டையில் கோவத்தை அடக்கிப் பேசும் விஜய்யின் வித்தியாசமான (!?) நடிப்பில் புலிவேந்தனும் திரையில் தோன்றுகின்றனர். ஸ்ருதிஹாசன் மழலையில் கொஞ்சிப் பேசி ஆடவும், ஹன்சிகா ஆட மட்டுமென நேர்ந்து விடப்பட்டுள்ளனர். ஜலதரங்கனாக வரும் சுதீப் மட்டும் கிடைத்த சின்னஞ்சிறு வாய்ப்பைத் தவற விடாமல் தன் நடிப்பால் ஈர்க்கிறார். ஸ்ரீதேவியோ ஒப்புக்கு வில்லியாக்கப்பட்டுள்ளார். ஒரு நீள ஃபேன்டஸி படத்துக்கு முயற்சி செய்துள்ளார் சிம்புதேவன். வைரநல்லூர் கிராமம், வேதாளபுரக் கோட்டை, குள்ள மனிதர்கள், ஒற்றைக் கண் மனிதன் எனப் பார்த்து...