
தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும் (2017) விமர்சனம்
'திருட்டுப்பொருளும் சாட்சியும்' என்பதே தலைப்பின் பொருள்.
ஆங்கிலத்தில், Angle in Details என்று சொல்லுவார்கள். மிக எளிமையான விஷயத்தைக் காட்சிப்படுத்துவது, அதனைப் புரிந்துகொள்வதில் விரிவாக ஆழம் செல்லச் செல்ல தெய்வீகம் வெளிப்படுகிறது. எளிமையே பிரம்மாண்டம். அதனைக் காணவும் மற்றவருக்கு அதே அனுபவத்தைக் கடத்தவும் சற்றே பெரிய கண்கள் தேவைப்படுகிறது. அது தனிக் கலை.
இந்தக் கலை பெரும்பாலான கேரள திரைப்படக் கலைஞர்களுக்குப் பிறப்பிலேயே வாய்த்திருக்கிறது எனலாம். மிக மிக எளிமையான கதையை கூட மனதில் நீங்காமல் இருப்பது போல காட்சிப்படுத்துவதில் கில்லாடிகள்.
ஃபஹத் ஃபாசில் நடிப்பில் இயக்குநர் திலீஷ் போத்தன் எடுத்த, 'மகேஷின்டே பிரதிகாரம்' என்ற படம் மிக நன்றாக ஓடியது (தமிழில் கூட அப்படம், உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் நிமிர் ஆக மறு உருவாக்கம் செய்யப்பட்டது). அதே இயக்குநர் ஃபஹத்துடன் இணைந்து, 'தொண்டிமுதலும் த்ரிக்சா...


