Shadow

Tag: நரேன்

சர்வதேச தரத்துடன் ஜூனியர் என்.டி.ஆரின் “தேவரா” கிளிம்ப்ஸ்

சர்வதேச தரத்துடன் ஜூனியர் என்.டி.ஆரின் “தேவரா” கிளிம்ப்ஸ்

திரைச் செய்தி, திரைத் துளி
மாஸ் ஹீரோ என்டிஆர் நடிப்பில், கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேவரா’ படத்தின் முதல் பாகத்தின் கிளிம்ப்ஸ் சர்வதேச தரத்துடன் வெளியாகியுள்ளது!மாஸான புதிய அவதாரத்தில் நடிகர் என்டிஆர் மிரட்ட உள்ள ஆக்‌ஷன் டிராமா திரைப்படம் ‘தேவரா’. இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். சயிஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இயக்குநர் கொரட்டாலா சிவா திட்டமிட்டுள்ளார். இதன் முதல் பாகமான, ‘தேவரா பார்ட்1’ உலகெங்கிலும் ஏப்ரல் 5, 2024 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.இந்தப் படத்தினை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். ‘தேவரா’வின் உலகை அறிமுகப்படுத்தும் வகையிலான கிளிம்ப்ஸ் இன்று வெளியா...
யூகி விமர்சனம்

யூகி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு மிஸ்ஸிங் கேஸை அடிப்படையாக வைத்து, அதோடு சிற்சில எமோஷ்னல் விசயங்களையும் தூவிப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். படத்தின் துவக்கத்திலே கயல் ஆனந்தி காணமால் போனதிற்கான விசாரணை துவங்குகிறது. அடுத்த காட்சி ஜான்விஜய் கொலை செய்யப்படுகிறார். இவை சம்பந்தமான விசாரணைகளும் விபரிப்புகளும் நடைபெறுகின்றன. ஒரு பக்கம் மாலை போட்ட கெட்டப்போடு நட்டி விசாரணைகளை நடத்துகிறார். மறுபுறம் டிடெக்டிவான நரேன், கதிரோடு இணைந்து விசாரிக்கிறார். இந்த மூன்று விசாரணைகளின் பின்னணியிலும் ஒரே விசயம் தான் பின்னப்பட்டிருக்கிறது. மேலும் இவர்கள் மூவரில் ஒருவரே இதைச் செய்திருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது. அது யார் என்பதே படத்தின் திரைக்கதையாக விரிகிறது டிடெக்டிவ் ஆபிசராக நரேன் பொருத்தமான உடல்மொழியை வெளிப்படுத்தி அந்தக் கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். நட்டி நடிப்பில் இயல்புத்தன்மை மிஸ்ஸிங். ஒருவேளை அவரது கேரக்டரின் வடிவம...
கைதி விமர்சனம்

கைதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை மீட்க ஒரு குழு கமிஷ்ணர் அலுவலகத்தை முற்றுகையிடுகிறது; போதையூட்டப்பட்ட போலீஸ் உயரதிகாரிகளை லாரியில் ஏற்றி மருத்துவமனையில் சேர்க்க ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் அதிகாரியான பிஜோய், லாரி ஓட்டக்கூடிய டில்லி எனும் சிறையில் இருந்து விடுதலையான நபரின் உதவியை நாடுகிறார்; அந்த லாரியில் இருக்கும் 5 அதிகாரிகளை மட்டும் கொல்ல பல குழுக்கள் வட்டமிடுகின்றன. கதாநாயகி இல்லாத படம்; அதனால் டூயட்டும் இல்லை; ஓரிரவில் நடக்கும் கதை என வழக்கமான படத்திலிருந்து மிக ஃப்ரெஷான மேக்கிங்கில் கவர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால், மீடியாவிற்குச் செய்தி கசிந்துவிடும் என அஞ்சி கமிஷ்ணர் ஆஃபீஸைப் பாதுகாக்க பேட்டலியனின் உதவியை நாட மாட்டேங்கிறார் பிஜோய் என கதை விட்டுள்ளதை ஏற்க முடியவில்லை. போலீஸ் என்ன சொல்லுகிறதோ அது தானே செய்தி? இரவில் எமர்ஜென்சிக்குப் பத்திருபது காவலர்களைக் கூட கமிஷ்ணர் ஆஃ...
யு டர்ன் விமர்சனம்

யு டர்ன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கன்னடத்தில், 2016 ஆம் ஆண்டு பவண் குமார் எழுதி இயக்கிய 'யு டர்ன்' எனும் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. 2017இல், மலையாளத்தில் 'கேர்ஃபுல்' என்ற பெயரில், இயக்குநர் V.K.பிரகாஷால் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பவண் குமாரே தமிழிலும், தெலுங்கிலும் இப்படத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார். வேளச்சேரி மேம்பாலத்தில், சாலையின் நடுவே உள்ள கற்களை நகர்த்திவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக யு எடுக்கும் வாகன ஓட்டிகளைப் பேட்டி எடுக்க முயல்கிறார் பயிற்சி நிருபரான ரட்சனா. ஆனால், அப்படி யு டர்ன் எடுத்த அன்றே அவ்வனைவருமே தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகின்றனர். அது தற்கொலையா, கொலையா என்று, நாயக் எனும் காவல்துறை அதிகாரியின் உதவியோடு துப்புத் துலக்குகிறார் ரட்சனா. வேளச்சேரி மேம்பாலத்தில், யு டர்ன் எடுத்தவர்களின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதே படத்தின் கதை. பார்வையாளர்களுக்கு, முழு நீள த்ரில்ல...