Shadow

Tag: பாலாஜி K. குமார்

கொலை விமர்சனம்

கொலை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விடியும் முன் படத்தினை இயக்கிய பாலாஜி K. குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கொலை. பிரபல மாடலும் பாடகியுமான லைலா என்னும் பெண் பூட்டப்பட்ட தன் வீட்டிற்குள் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கிறாள். அவளை கொன்றது யார் என்கின்ற கேள்விக்கு விடை தேடும் படலம் தான் இந்தக் கொலை. இயக்குநர் பாலாஜி K. குமாரின் முந்தைய படமான ‘விடியும் முன்’ திரைப்படமே அது உருவாக்கப்பட்ட விதத்திலும், அதில் பயன்படுத்தப்பட்ட ஒளிக் கீற்றுகள், வண்ணங்கள் ஆகியவற்றின் பலத்தினாலும் இந்திய வரைவியலுக்கு உட்பட்ட கதைக்களமான நிலத்தை ஹாலிவுட் காட்சியமைப்போடு காட்டி மிரட்டியதற்காக வெகுவாக பாராட்டும் வரவேற்பும் பெற்றது. அது போல் தான் கொலை திரைப்படமும். படத்தின் ஆரம்பத்தில் கருப்பு வெள்ளையில் வரும் காட்சி பிம்பங்கள் மட்டுமன்றி ஒட...
“ஒரு மனிதன் ஏன் ‘கொலை’ செய்கிறான்?” – மிஷ்கின்

“ஒரு மனிதன் ஏன் ‘கொலை’ செய்கிறான்?” – மிஷ்கின்

இது புதிது
பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’ ஆகும். இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சென்னையில் சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் மற்றும் பல முக்கிய திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் தனஞ்செயன், “இந்த இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் உருவாக மிக முக்கிய காரணம் நடிகர் விஜய் ஆண்டனிதான். தொடர்ந்து இரண்டு, மூன்று படங்கள் தயாரிக்க வேண்டும் என்று அவர்தான் எங்களை ஊக்கப்படுத்தினார். இந்தக் ‘கொலை’க்கு பிறகு ‘இரத்தம்’ வரும். அதன் பிறகு ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் வரும். இப்படி அடுத்தடுத்து விஜய் ஆண்டனி அவர்களுடன் இணைந்து படத்தில் பணி புரிவத...
விஜய் ஆண்டனியின் ‘கொலை’ – சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்

விஜய் ஆண்டனியின் ‘கொலை’ – சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம்

சினிமா, திரைத் துளி
‘கோடியில் ஒருவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம், மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீண்டும் விஜய் ஆண்டனியுடன் கை கோர்க்கின்றன. ‘விடியும் முன்’ படத்தின் இயக்குநரான பாலாஜி கே. குமார் இயக்கும் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்திற்கு ‘கொலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இதுவரையிலும் நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கிறார். மேலும் இந்தப் படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார் மற்றும் சம்கித் போஹ்ரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘இறைவி’, ‘இறுதி சுற்று’, ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘விடியும் முன்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘மெரினா’ மற்றும் ‘நெற்றிக்கண்’ புகழ் கிரிஷ்...
விடியும் முன் விமர்சனம்

விடியும் முன் விமர்சனம்

திரை விமர்சனம்
பிரதான கதாபாத்திரங்களை நாயகன், வில்லன் என்ற இரண்டுக்குள் தமிழ்த் திரைப்படம் அடக்கி விடும் (மிக அரிதினும் அரிதாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதால் கணக்கில் எடுக்கவில்லை). இந்த இரண்டையும் கூட இன்னும் சுருக்கி நல்லவனுக்கம் கெட்டவனுக்குமான போராட்டம் என்ற ஒற்றை பரிமானத்தை அடையலாம். ஆனால் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு மெல்லிய முக்கியத்துவத்தையாவது கொடுத்து விடுமளவு திரைக்கதை கொண்ட படம் மிக அபூர்வம். அப்படியொரு அபூர்வம் தான் ‘விடியும் முன்’ திரைப்படம்.   விலைமகளான ரேகாவையும், சிறுமி நந்தினியையும் ஒன்றுக்கும் மேற்பட்ட கும்பல் தேடி அலைகிறது. ஏன் எதற்காக என்பது தான் படத்தின் கதை.   உங்களுக்கு வினோத் கிஷனைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரது குத்திட்ட பார்வை நமக்கு நன்றாக அறிமுகமானதே! ‘நந்தா’ படத்தில் தன் தந்தையை அடித்துக் கொன்றுவிடும் அந்த சிறுவன் தான்...