Shadow

Tag: பாவனா

அனோமி விமர்சனம் | Anomie review

அனோமி விமர்சனம் | Anomie review

சினிமா, திரை விமர்சனம்
அனோமி என்றால் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டோ, தனிமைப்படுத்தப்பட்டோ, நம்பிக்கையிழந்து, குறிக்கோள் இன்றி நிற்கும் ஒரு நிராதரவான நிலையைக் குறிப்பதாகும்.மன அழுத்தத்தில் உள்ள ஜியான் பிலிப் இறந்து போகிறார். அதைத் தற்கொலை என காவல்துறை அதிகாரி ஜிப்ரான் வழக்கை முடிக்க, அது தொடர் கொலைகளில் ஒன்றென நீதிமன்றத்தில் நிறுவுகிறார் ஃபாரன்ஸிக்கில் வேலை செய்யும் ஜியானின் தமக்கை ஜாரா பிலிப். சைக்கோ கொலைக்காரனைப் பிடித்தாக வேண்டிய அழுத்தம் ஜிப்ரானுக்கு நேரிடுகிறது. தம்பியைக் கொன்றவனை ஜாராவும் மும்மரமாகத் தேடுகிறார். கொலை செய்தது யார் என்றும், எதற்காகக் கொலை செய்தனர் என்பதற்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.காவல்துறை அதிகாரி ஜிப்ரானாக ரஹ்மான் நடித்துள்ளார். முதற்பாதியில் சற்றே அலட்சியமாக இருப்பவர், நீதிமன்றத் தலையிடலுக்குப் பின், இரண்டாம் பாதியில் துரிதமாகச் செயற்பட்டுக் குற்றவாளியை அணுகுகிறார். அழுத்தமாக ...
‘வாழ்த்துகள்’ படத் தோல்வியும் – சீமானின் திமிர்த்தனமும்

‘வாழ்த்துகள்’ படத் தோல்வியும் – சீமானின் திமிர்த்தனமும்

இது புதிது, கட்டுரை, சினிமா
“வாழ்த்துகள் (2008) படம் தோல்வி அடைந்ததற்கு என்னுடைய திமிர்த்தனம்தான் காரணம். என் தாய்மொழி தமிழிலேயே எல்லா உரையாடலும் எழுதணும்னு நினைச்சேன். அதுக்கு வருத்தப்படுறேன். இந்த இனத்தில் பிறந்ததற்கு, பெருமையடையுறேன். அதே சமயம் சிறுமையும் அடையுறேன். ‘ஐ லவ் யூ’ன்னு சொல்ல வேண்டிய இடத்தில் ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ எனச் சொல்வது நெருடலாக இருக்குன்னு விமர்சனம் எழுதுறாங்க. காசி அண்ணனிடம் சொன்னேன். அன்பைக் கூட தாய்மொழியில் பரிமாறிக் கொள்ளாத ஓர் இனம் இருந்தாலென்ன, செத்தாலென்ன என்று கேட்டார். தமிழர்களுக்குத் தாய்மொழி அந்நியப்பட்டுப் போச்சு. இதை விட இழிவு வேறெதுவுமில்லை.” - இயக்குநர் சீமான் (சீமான் செய்த துரோகம்) ... வாழ்த்துகள் படத்தின் கதைச்சுருக்கம்: மாமியார், மாமனாரை நேசிக்கும், குடும்பத்தைச் சிதைக்காத மனைவி அமைந்தால் தேவலாம் என நினைக்கிறார் நாயகன். ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் அப்படியொருவரைப் பார்த...