Shadow

Tag: மகாசேனா திரைப்படம்

மகாசேனா விமர்சனம் | Mahasena review

மகாசேனா விமர்சனம் | Mahasena review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மகாசேனா என்பது யாளீஸ்வர் எனும் தெய்வத்தைக் குறிக்கும் திருநாமங்களில் ஒன்றெனப் படத்தலைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். யாளிமலையில் உள்ள குரங்கணி எனும் ஊரில், எவர் கண்ணுக்கும் தெரியாத ‘யாளீஸ்வரர் சிலை’ ஒன்று கோயிலில் இருப்பதாகக் கருதப்படுகிறது. சித்ரா பெளர்ணமியன்றே அச்சிலையைக் கண்களால் காண முடியும். அதை அபகரிக்க அடிவாரப்பகுதி மக்கள் மூவாயிரம் ஆண்டுகளாக முயற்சி செய்கின்றனர். குரங்கணியின் தலைவன் செங்குட்டுவன் அதைக் காப்பாற்ற நினைக்க, அதை அடைந்தே தீருவது எனும் தீவிரமான பிடிவாதத்துடன் உள்ளார் அடிவாரப்பகுதி தலைவி கங்கா. யாளி சிலையை அடைந்தே தீருவதென்ற கங்காவின் சபதம் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. நரபலி கொடுக்கும் காட்டுவாசிகளாக உள்ளனர் அடிவாரப்பகுதி மக்கள். அதிகாரிகளின் தலைகளைக் கொய்து சாக்கில் சுருட்டி எடுத்துச் செல்லும், கைலி அணிந்த நாகரீகமானவர்களாக உள்ளனர் குரங்கணி மக்கள். குரங்கணி...