
“விஸ்வநாத் & சன்ஸ்: ஹாட்ரிக் வெற்றி” – ஜி.வி | The ONE Suriya
சித்தாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் 'சூர்யா' நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம், பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்தப் படக்குழுவினர், நன்றி நவில்தல் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், ''சூர்யாவை 2003 ஆம் ஆண்டில் 'கஜினி' படத்திற்காக நேர்காணல் செய்தேன். நேர்காணலுக்காக ஒப்புக்கொண்ட நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாக வந்தா...








