
பாரம் – சொன்னதைச் செய்த மிஷ்கின்
சினிமா மீது தீராத காதல் கொண்டவர் இயக்குநர் மிஷ்கின். தனது தனித்துவமான படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தனித்தன்மை மிக்க இயக்குநர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். இவரது படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கும் அதே நேரத்தில் திரைக்கல்லூரிகளில் பாடங்களாக விவாதிக்கப்பட்டும் வருகின்றது.
சினிமாவை உயிராக நேசிக்கும் அவர் நல்ல படங்கள் வரும் போது, முதல் ஆளாகப் பார்க்கவும் பாராட்டவும் தவறுவதில்லை. “பாரம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், 'பாரம் படம் வெளியாகும்போது நான் விளம்பரத்திற்காகத் தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன்' எனக் கூறியது போலவே அவர் தற்போது செய்து காட்டியுள்ளார். சினிமா மீதான அவரது அளவற்ற நேசிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்குநர் மிஷ்கினின் அளவிலா அன்பின் செயலால் மிகுந்த புளகாங்கிதம் அடைந்துள்ளார். "பாரம் படம் மீது இயக்கு...













