Shadow

Tag: ம.தொல்காப்பியன்

புஷ்பா: தி ரைஸ் விமர்சனம்

புஷ்பா: தி ரைஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஓரு தெலுங்கு சினிமாவை விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்வதா என்ற தயக்கம் என்னிடம் எப்போதுமே உண்டு. பார்வையாளர்களின் சிந்தனையை முடக்கிப் போடும் தெலுங்குத் திரையுலகின் ஹைப்பர் சினிமாத்தனமும், லாஜிக்கல் அத்து மீறல்களும் உலகமே அறிந்த ஒன்று. இதற்கு புஷ்பா மட்டும் விதி விலக்கா என்ன? இல்லை. இது அச்சு அசல் ஒரு தெலுங்கு சினிமாதான். அதே லட்சணங்களோடுதான் இந்தப் படமும் இருக்கிறது. ஆனாலும் என்னைக் கவர்ந்த சில அம்சங்கள் இதில் இடம் பெற்று இருப்பதை நான் குறிப்பிட்டு ஆக வேண்டும். அவை, பாத்திர வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, வட்டார மொழிப் பயன்பாடு, உடல்மொழி, இலக்கு மாறாமை ஆகியனவாகும். சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ என்ற படத்தின் வெற்றி குறித்து விதந்தோதிக் கொண்டிருந்தோம். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ‘சீரியசான’ முக பாவத்தோடு நடித்து இருந்ததற்கு வெகுவான பாராட்டினைப் பெற்றிருந்தார். சீரியசான ஒர...
தம்பி விமர்சனம்

தம்பி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாபநாசம் படத்தின் மூலம் நம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ஜீத்து ஜோசப். பாபநாசத்தைப் போலவே தம்பியும் ஒரு த்ரில்லிங் அனுபவத்தைக் கொடுக்கின்றது. கதை சொல்வதில் தனது த்ரில்லர் திறமையைக் கொட்டி இருக்கிறார் ஜீத்து. ஆனால் கொஞ்சம் அதிகமாகவே கொட்டியுள்ளார். கதைக்கு ட்விஸ்ட் என்பது சுவாரசியமாகவும், ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவும் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் என்று வெறும் ட்விஸ்டாக மட்டுமே கொடுத்துக் கொண்டு இருந்தால் எப்படி? ஜீத்து, மலையாள வாசத்தோடு படத்தை எடுத்துள்ளார். கதாபாத்திரங்கள் அனைவரும் தமிழில்தான் பேசுகிறார்கள். ஆனால் அது மலையாளப் படமாகத்தான் நகருகிறது. தமிழில் பேசுவதாலேயே தமிழ்ப்படம் என்று சொல்ல முடியாது. ஏன் என்றால், ஒவ்வொரு காட்சிக்குமான அரேஞ்ச்மென்ட்ஸ் மலையாள மார்க்கமாகவே இருக்கிறது. ஒரு காட்சிக்குள் படிப்படியாகக் கதாபாத்திரங்களைக் கொண்டு வர இயக்குநர...
திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்

திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்

சினிமா, புத்தகம்
'திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் தொல்காப்பியன். "சரிகமபதநி" எனும் ஏழு ஸ்வரங்களைப் போல 7 தலைப்புகளில் தொல்காப்பியன், தன் மேன்மைத் தமிழில் , அவருடைய உளவியல் பார்வையைப் படரவிட்டு, சமூகம், கலை, பண்பாடு ஆகிய மூன்றையும் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்தி மிகச் சிறந்த ஆய்வுப் புத்தகத்தைப் பொருத்தமான நேரத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்தப் புத்தகம் ஒரு 'சினிமா அறிவியல் (Cinema Science)' புத்தகம் என்ற வகைப்பாட்டில் முதன்மைப்படுத்தி வைக்கலாம். ஓர் எழுத்தாளன் எழுத்துக்களை எப்படிக் கோர்த்து எழுதவேண்டும் என்பதற்கு இந்தப் புத்தகமே சரியான முன்னுதாரணம். முனைவர் பட்டம் பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்ட புத்தகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு அற்புதமான செய்திகளைத் தாங்கி நிற்கிறது. சினிமாவைப் பற்றிய புரிதலும் ஆர்வமும், அதன் மீது கொண்ட காதலும் வெறியும், ஒரு சேரக...