Shadow

Tag: ரம்யா பாண்டியன்

அருள்வான் விமர்சனம் | Arulvaan review

அருள்வான் விமர்சனம் | Arulvaan review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அருள் என்பது இறைவனின் எல்லையற்ற கருணை, இரக்கம் மற்றும் ஆசீர்வாதத்தைக் குறிக்கும் ஆன்மிகச் சொல்லாகும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் கடவுளின் ஐந்தொழில்களில் மிக மேன்மைமிக்க ஒன்றாகும். அத்தகைய தெய்வத்தின் தொழிலை, ஒரு மனிதனால் செய்ய முடியுமா? 'புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' எனும் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி, 'முடியும்' என்கிறார் இயக்குநர். பூங்கொடி எனும் மலைக்கிராமத்தில் வாழும் குறிஞ்சி எனும் சிறுமி, கல்வியே தங்களுக்கான விடியலைத் தரும் எங்கின்ற முயற்சியில் மேற்கொள்ளும் நம்பிக்கைப் பயணமே இப்படத்தின் கதையாகும். காளி வெங்கட்டைக் கதையின் நாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமிது. ஆரவும் அருள்நிதியும் படத்திற்குள் வர, காளி வெங்கட்டிற்குப் பத்திரிகையாளர் தன்ராஜ் எனும் சிறு வேடமே வாய்த்துள்ளது. மருத்துவமனைக் காட்சியில், குறிஞ்சியின் நிலைமையைக் குறித்து உருக்...
ஆண் தேவதை விமர்சனம்

ஆண் தேவதை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முன்னாள் பத்திரிகையாளரான இயக்குநர் தாமிரா, இயக்குநர் இமயத்தையும் சிகரத்தையும் ஒன்றாக நடிக்க வைத்து ரெட்டச்சுழி எனும் படத்தை 2010 இல் எடுத்தவர். எட்டு வருடங்களுக்குப் பிறகு அவர் தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார். சிறகுகள் உதிர வெண்ணிற இறக்கைகள் மேகத்தினூடே பறக்க, ஆண் தேவதை என்ற பெயர் திரையில் வருகிறது. படத்தின் தொடக்கமே, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் பற்றிய சமுத்திரக்கனியின் விளக்கத்தோடு, "தீதும் நன்றும் கற்றுத் தருவோம்"என படம் தொடங்குவது சிறப்பு. அந்தச் சிறப்பு, படம் முழுவதும் நீள்கிறது. எது சரி, எது தவறென விளக்கிக் கொண்டே இருக்கிறார் சமுத்திரக்கனி. ஒரு கட்டத்தில் கடுப்பாகும் நாயகி, "என்னை அட்வைஸ் பண்ணியே கொன்னுடாத!" எனக் கதவை டமாலென மூடுகிறார். நாயகி ரம்யா பாண்டியனும், சமுத்திரக்கனியும் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆதிரா, அகரமுதல்வன் என இரட்டைக...
ஜோக்கர் விமர்சனம்

ஜோக்கர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாமானியர்களைச் சமூகம் எப்படி ஜோக்கராக்குகின்றது என்பதே படத்தின் கதை. ‘கோண மண்டை’யாக இருப்பதால் பிடிக்கலை எனச் சொல்லிய பின்னும், மல்லிகாவைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும் வழக்கமான தமிழ் சினிமா ஹீரோதான் மன்னர்மன்னன். ‘யாருகிட்டயும் பேசாமலும், தலை நிமிராமலும் இருக்கும் பெண்ணைப் பார்க்கலாமா?’ என்று மன்னர்மன்னனின் மச்சான் கேட்கிறார். படத்தின் கதை நடக்கும் களம் தருமபுரி. படம் முழு நீள(!?) அரசியல் நையாண்டிப் படம். தமிழகத்தில் அதிகரித்து வரும் ‘கெளரவக் கொலை’ குறித்த ஒரே ஒரு வசனம் கூட வராதது எதேச்சையானதாக இருக்கலாம். ஏனெனில் படம் சமகால அரசியல் அவலங்கள் அனைத்தையும் சகட்டுமேனிக்குப் பகடி செய்கிறது. ‘அவங்க கொடுக்கலைன்னா நாமலே எடுத்துக்கணும் பைய்யா. அதுதான் பவரு’ என மன்னர்மன்னனின் அரசியல் குருவாகக் கலக்கியுள்ளார் எழுத்தாளர் பவா செல்லத்துரை. படத்தின் ஆகப் பெரிய பலம் அதன் கதாபாத்திர வடிவமைப்புகள...