Shadow

Tag: விஜய் டிவி புகழ்

சொட்ட சொட்ட நனையுது விமர்சனம் | Sotta Sotta Nanaiyuthu review

சொட்ட சொட்ட நனையுது விமர்சனம் | Sotta Sotta Nanaiyuthu review

சினிமா, திரை விமர்சனம்
காரைக்குடியைச் சேர்ந்த செல்வந்தனான ராஜாவிற்கு தலையில் சொட்டை தோன்றி முழு வழுக்கையாக மாறிவிடுகிறது. அதனால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் ராஜாவிற்குக் கல்யாணமும் தள்ளிப் போகிறது. எதிர் வீட்டில் வசிக்கும் ராயல் பாட்டியின் வீட்டுக்குப் படிப்பு முடித்து வரும் அவரது பேத்தி பிரியாவை ராஜா விரும்ப, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமாகிறது. இந்நிலையில், கல்யாணத்துக்கு முன் தினம் கல்யாணத்தை ராஜாவே நிறுத்துகிறான். கல்யாணத்தை ராஜா ஏன் நிறுத்தினான், அதன் பின் என்னாகிறது என்பதே படத்தின் கதை. அறிமுக இயக்குநரான நவீத் S. ஃபரீத் அவர்களின் தந்தை ஷேக் ஃபரீத், நாயகனின் தந்தை பண்ணை பரமசிவமாக நடித்துள்ளார். ப்ரோக்கர் குலுக்கல் குமரேசனாக ரோபோ சங்கர் நடித்துள்ளார். நாயகனின் கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்யும் ராக்கெடியாக விஜய் டிவி புகழ் வருகிறார். இப்படத்திற்கு வசனமும் திரைக்கதையும் எழுதி, நண்பனின் நாயக...
ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்

ஏஜென்ட் கண்ணாயிரம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வஞ்சகர் உலகம் எனும் படத்தை இயக்கிய மனோஜ் பீதா, ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா’ எனும் தெலுங்குப் படத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார். இரயில்வே பாதையின் ஓரமாகக் கிடைக்கும் அநாமதேய பிணங்களின் பின்னணியில் நிகழும் பகீர் குற்றங்களை டிடெக்டிவான ஏஜென்ட் கண்ணாயிரம் அவிழ்ப்பதுதான் படத்தின் கதை. சந்தானத்தை டிடெக்டிவாக அறிமுகப்படுத்தும் காட்சியே படுபயங்கர சொதப்பல். அங்கு தொடங்கும் சொதப்பலைப் படமெங்கும் பல காட்சிகளில் தொடர்கின்றன. தந்தையின் முதல் மனைவி வாரிசுகளுடன் சொத்துப் பிரச்சனை என ஊரில் தங்குபவர், ஒரு காரைப் பார்த்து அதை எந்தக் கேள்வியுமின்றி ஓட்டிக் கொண்டு வருகிறார். அது அவர் உபயோகித்த காரா அல்லது பாகப்பிரிவனையில் அவருக்காக ஒதுக்கப்பட்ட காரா என்பதிலெல்லாம் தெளிவில்லை. காட்சிகளின் நகர்விலுள்ள இத்தகைய தெளிவின்மைதான் படத்தின் மிகப் பெரும் மைனஸ். டைட்டில் கார்ட் போடும் பொழுது வரும் அனிமேஷன் ரசிக்க...