Shadow

Tag: ஹாரிஸ் ஜெயராஜ்

காதல் ரீசெட் ரிப்பீட் | Kadhal Reset Repeat review

காதல் ரீசெட் ரிப்பீட் | Kadhal Reset Repeat review

இது புதிது
ஒரு நாள் நிகழ்வு மட்டுமே ஞாபகமிருக்கும் அதிதியைத் தினம் தினம் புதிதாகக் காதலிக்கிறார் சித்தார்த். 50 First Dates (2004) படத்தின் ஒரு வரிக் கதையால் இன்ஸ்பையராகி, இசை, துரோகம், ஏமாற்றம், ஆழ்ந்த காதல் ஆகியவற்றின் கலவையாக ஒரு முக்கோண காதல்கதையைத் தந்துள்ளார் இயக்குநர் விஜய்.'சிரிச்சா போச்சு' எனும் விரதத்தைப் பூண்டவராகச் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மதும்கேஷ். அதிதி காதலைச் சொல்லும் இடத்திலும் கூட மருந்துக்கு முகத்தில் ஒரு மாற்றத்தைக் காட்டிவிடக் கூடாத என கங்கணம் கட்டிக் கொண்டு நடித்துள்ளார். இயக்குநர் விஜயின் கதாபாத்திர வார்ப்பே அப்படித்தான் என்பதைச் சிறு வயது சித்தார்த்தாக வரும் சிறுவனின் நடிப்பில் இருந்து யூகிக்க முடிகிறது. பிரதான கதாபாத்திரத்தின் உணர்ச்சியற்ற முகத்தாலோ என்னவோ, ஹாரிஸ் ஜெயராஜின் தோளில் அதிக சுமையேறி விடுகிறது. நாயகனின் காதலையோ, அவனது மனவுணர்வுகளையோ மதும்கேஷ் ...
காதல் ரீசெட் ரிப்பீட் – ஒரு musical story

காதல் ரீசெட் ரிப்பீட் – ஒரு musical story

சினிமா, திரைச் செய்தி
மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ், டி ஸ்டுடியோஸ், டென்வி புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. திரையிசையுலகில் 25 ஆவது ஆண்டாக வெள்ளிவிழா காணும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படக்குழுவினருடன் இயக்குநர் பாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ''1999 ஆம் ஆண்டில் இளம் இயக்குநராக இருந்த கௌதம் மேனனைச் சந்தித்தேன். கேமரா மேன் ஆர்.டி. ராஜசேகர் மூலமாக விளம்பரப் படத்திற்காக அவர் என்னைச் சந்தித்தார். அதன் பிறகு 2000 ஆண்டில் 'மின்னலே' படத்தின் ப...
பால் டப்பா பாடிய ‘மை நேம் இஸ் ஜான்’

பால் டப்பா பாடிய ‘மை நேம் இஸ் ஜான்’

இது புதிது, சினிமா, திரைத் துளி
'துருவ நட்சத்திரம்' படத்தில் இருந்து வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் 'மை நேம் இஸ் ஜான்' பெப்பி பாடலை பால் டப்பா எழுதி பாடியுள்ளார்! கௌதம் வாசுதேவ் மேனனும், ஹாரிஸ் ஜெயராஜும் படத்திற்காக இணையும் போதெல்லாம், பாடல்களில் நிச்சயம் ஒரு மேஜிக் நிகழும் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். மிகவும் எதிர்பார்க்கப்படும் 'சியான்' விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் முதல் பாடலான 'ஒரு மனம்' இசை ஆர்வலர்கள் மத்தியில் அமோக வெற்றியைப் பெற்ற பிறகு, படக்குழு அவர்களின் இரண்டாவது சிங்கிளான 'ஹிஸ் நேம் இஸ் ஜான்' உடன் மீண்டும் வந்துள்ளது. இந்தப் பாடல் ஜூலை 19, 2023 அன்று வெளியிடப்பட்டது. இந்தp பெப்பியான பாடலுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தியுள்ளனர். திறமை மற்றும் துடிப்பான இண்டி ராப்பரும் பாடலாசிரியருமான பால் டப்பா இந்த வசீகரிக்கும் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இதற்கு முன்பு வெளியாகி ஹிட் ஆன பாடலான 'ஐ...
ஸ்பைடர் விமர்சனம்

ஸ்பைடர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தெலுங்கு நடிகரான பிரின்ஸ் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம்; படத்தின் பட்ஜெட் 125 கோடி என நீளும் சிறப்புகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் இருப்பது, இது ஏ.ஆர்.முருகதாஸின் படம். பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்கும் ஒற்று (SPY) வேலை செய்கிறார் நாயகன். அப்படிக் கேட்பதில் இருந்து கிடைக்கும் மைனாரிட்டி ரிப்போர்ட்-டினைக் கொண்டு, தவறுகள் நடக்கும் முன் தடுக்கிறார் ஸ்பைடரான நாயகன். இறந்தவர்களினுடைய உறவினர்களும் நண்பர்களும் அழுகின்ற குரல்களைக் கேட்டு ரசிக்கும் சாடிஸ்ட் (sadist) ஒருவனை, ஒற்றேவல் புரிந்து பிடிக்கிறார் ஸ்பைடர். அவன் தீட்டி வைத்திருக்கும் கொடூரமான திட்டங்களை ஸ்பைடர் தடுத்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படம் ஹைதராபாதில் தொடங்கி அங்கேயே முடிகிறது. படத்தின் தொடக்கத்தில், கதாபாத்திரங்களின் உதட்டசைவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆரம்...