
29* – தன்னை யாரென உணர்தல்
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ, ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் '29' திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் 'Welcome To The World of 29' என்ற பிரத்தியேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், "இந்தப் படத்தின் கதை காதலைப் புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது. நீண்ட காலமாக காதல் படங்களில் பணியாற்றியிருந்தாலும், இந்தக் கதை என்னுள் மறைந்திருந்த காதல் உணர்வை மீட்டது. இன்றைய வேகமான வாழ்க்கையில் நேர்மையான காதலைப் பேசும் படைப்பாக '29' இருக்கும். தமிழ் காதல் படங்களின் தனித்துவமான வரிசையில் இப்படம் இடம் பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்...


