பிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம்? அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம்
விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துவிடுவார்களோ என பயந்து கொண்டே தானே பார்க்க ஆரம்பித்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. நேற்று வனிதா பேசினது யாருக்கு புரிந்ததோ இல்லையோ, அபிராமிக்கு நிறைய குழப்பங்கள். 'நாம தப்பு பண்ணிட்டோமோ?' என சந்தேகம்.
அபியைப் பொறுத்தவரைக்கும் இது விளையாட்டாக ஆரம்பித்தது என்று தான் சொல்லவேண்டும். வந்த முதல் நாளே கவினிடம் தன் காதலைச் சொல்கிறார். மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கூட இதை மறைக்கவில்லை. கவின் அபிக்கு வெளியில் ஃபேஸ்புக்கில் அறிமுகம் இருந்திருக்கு. ஒரு கிரஷ். ஆக ஒரு எக்சைட்மென்ட்டில் ஆரம்பித்தது, கவின் விலகி போன உடனே காற்று போன பலூன் மாதிரி ஆகிவிடுகிறது. அந்தப் பக்கம் அபியை ரிஜக்ட் பண்ணின கவின், சாக்ஷி பக்கம் சாய்கிறான். ஆக, சாதரணமாக ஒருவரிடம் இருக்கிற ஈகோ அபிக்கும் எட்டிப் பார்க்கிறது. 'நீ என்னை ரிஜக்ட் பண்ணின இல்ல? உன் முன்னாடியே நான் ஒருத்தனை லவ் பண்ணி காட்டற...