Shadow

பிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம்? அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம்

bigg-boss-3-day-51

விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துவிடுவார்களோ என பயந்து கொண்டே தானே பார்க்க ஆரம்பித்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. நேற்று வனிதா பேசினது யாருக்கு புரிந்ததோ இல்லையோ, அபிராமிக்கு நிறைய குழப்பங்கள். ‘நாம தப்பு பண்ணிட்டோமோ?’ என சந்தேகம்.

அபியைப் பொறுத்தவரைக்கும் இது விளையாட்டாக ஆரம்பித்தது என்று தான் சொல்லவேண்டும். வந்த முதல் நாளே கவினிடம் தன் காதலைச் சொல்கிறார். மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கூட இதை மறைக்கவில்லை. கவின் அபிக்கு வெளியில் ஃபேஸ்புக்கில் அறிமுகம் இருந்திருக்கு. ஒரு கிரஷ். ஆக ஒரு எக்சைட்மென்ட்டில் ஆரம்பித்தது, கவின் விலகி போன உடனே காற்று போன பலூன் மாதிரி ஆகிவிடுகிறது. அந்தப் பக்கம் அபியை ரிஜக்ட் பண்ணின கவின், சாக்‌ஷி பக்கம் சாய்கிறான். ஆக, சாதரணமாக ஒருவரிடம் இருக்கிற ஈகோ அபிக்கும் எட்டிப் பார்க்கிறது. ‘நீ என்னை ரிஜக்ட் பண்ணின இல்ல? உன் முன்னாடியே நான் ஒருத்தனை லவ் பண்ணி காட்டறேன் பாரு’ என ஆரம்பித்தது தான் முகினுடனான நட்பு / காதல். தன்னை நிராகரித்தவர் முன்னாடி, நான் ஒன்றும் அவ்வளவு சாதாரணமானவள் இல்லையென தன்னை நிரூபிக்கக் கிளம்புவது பெண்களாகத் தான் இருப்பாங்க. நிராகரிக்கப்பட்ட மொமெண்ட்டில் வேண்டுமெனில் ஆண்களுக்கு வீராவேசம் இருக்கும். ஆனால் கொஞ்ச நாளில் அது காணாமல் போய்விடும். இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து தான். மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

அபி – முகின் நட்பு உருவாகிறது. இரண்டு பேரும் ஷேர் பண்ணிக் கொள்கிறார்கள். விளையாட்டாக இருந்தாலும் முகினோட கதை அபிக்கு ஒரு சிம்பதியை உண்டாக்குகிற்ந்து. அவர் மேல் ரொம்ப கேர் எடுத்துக் கொள்கிறார். முகின் பொறுத்த வரைக்கும் கடல் கடந்து இந்த ப்ரொகிராமுக்கு வந்துள்ளார். ‘நம்மளை ஏத்துப்பாங்களா மாட்டாங்களா?’ என ஒரு கன்ஃப்யூஷன் இருந்திருக்கும் அவருக்கு. அன்புக்காக ஏங்கும் ஒரு இளைஞன், 15 பேர் இருந்த வீட்டுல ஒருத்தருக்கொருத்தர் பர்சனலாக அறிமுகமாவறதுக்கு முன்னாடியே அபியிடம் நெருக்கம் ஆகிறார்.

இங்கே அபிக்கு இன்னொரு பிரச்சினை வருகிறது. முகினுக்கு ஏற்கெனவே ஒரு ஆள் இருக்கு. அதை அவரே ஓபனாகச் சொல்கிறார். அபியாலல் இப்போ பின்வாங்க முடியாது. இந்த உறவை அப்படியே தொடர்கிறார்.

இங்கேயே இரண்டு விதமாக யோசிக்கலாம். ஒன்று, முகினுக்கு வெளியே ஆள் இருந்தாலும் தன்னால் அவனை வீழ்த்த முடியுமென நினைத்திருக்கலாம். இரண்டாவது, ஏற்கெனவே அன்புக்காக ஏங்குகின்ற ஒருவரை திடீர்னு விலகி மறுபடியும் அவரைக் காயப்படுத்த வேணாம் என நினைத்திருக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும், நாம் பார்த்த வரைக்கும், நமக்குக் காட்டப்பட்டது வரைக்கும், முகின் எந்த விதத்திலும் அபியிடம் காதலிக்கற மாதிரி பழகவில்லை. தானும் காதலிக்கறதாக எங்கேயும் சொல்லவில்லை. இதை அபியும் ஒத்துக் கொள்கிறார். அபி தான் முகினைச் சுற்றிச் சுற்றி வந்தாங்களே தவிர, முகின் எந்த ஈடுபாடும் காட்டவில்லை. கட்டிப் பிடிப்பது, தோளில் சாய்ந்து கொள்வது, கை கோர்த்துக் கொள்வது எல்லாமே அபி தான்.

இப்போ நேற்றைய விஷயத்துக்கு வரலாம். வனிதா வெளியில் இருந்து எல்லாத்தையும் பார்த்திருக்கிறார். ஓக்கே. வீட்டுக்குள்ளே நடந்த விஷயங்களுக்கு நமக்கு இருக்கற மாதிரியே அவங்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்கு, அதுவும் சரிதான். திரும்ப வீட்டுக்கு போக வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் வீட்டுக்குத் திரும்ப வந்த உடனே எல்லாப் பிரச்சினையையும் எல்லோர் முன்னாடியும் பேச வேண்டிய அவசியமே இல்லை. அது தான் மிகப்பெரிய தவறாக நினைக்கிறேன். ஏனெனில் அவர்களும் ஒரு கன்டெஸ்டன்ட் தான். எல்லோரையும் உட்கார வைத்தொ பேசுறதுக்கும், பிரச்சினைகளைத் தீர்க்கிறதுக்கும் தான் வாரா வாரம் கமல் வருகிறார். அந்த வேலையை வனிதா செய்தால், கமல் சார் இந்த ஷோவுக்கு எதுக்கென்று ஒரு கேள்வி வருகிறது இல்லையா?

கவினைப் பற்றிப் பேசவேண்டுமா? கவினிடம் தனியாகப் பேசட்டும். முகினையும், அபிராமியையும் தனியாக அழைத்து வைத்து அட்வைஸ் பண்ணிருக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டுத் தன்னை ஒரு பெரிய நாட்டாமையாக நினைத்துக் கொண்டு பேசுவதைத்தான் சகித்துக் கொள்ழ்லவே முடியவில்லை.

நேற்று, பிரச்சினைக்கு முக்கிய காரணமே அபி – முகினிடம் தனியாகப் பேச வேண்டிய விஷயத்தைப் பொதுவில் பேசியது தான். அதை கவின் சரியாகச் சுட்டிக்காட்டினார்.

ஏற்கெனவே குழப்பத்தில் இருந்த அபிராமியை இன்னும் குழப்பி விட்டார் வனிதா. அபியும் ஆரம்பத்திலிருந்து எடுப்பார் கைப்பிள்ளையாகத்தான் இருக்கிறார். யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே மண்டைக்குள் ஏற்றிக் கொள்கிறார். அப்படி ஒரு கேரக்டராக இருக்கும் போது, நான் மேலே சொன்ன இரண்டு தியரியில் முதல் தியரி அடிப்பட்டுப் போகிறது. ‘முகினை வீழ்த்திக் காட்டுகிறேன் பார்’ என கிரிமினலாக யோசிக்கற அளவுக்கு அபிக்கு யோசனை போகாது.

முகின் முன்னேற்றம் தடைப்படுது எனச் சொன்ன உடனே, இனிமே அப்படி செய்யலை எனச் சொல்லி மன்னிப்பும் கேட்கிறார். ஆனால் நான் அப்படி பழகுனதில் முகினுக்கு எந்த பங்குமே இல்லையா? அப்படிங்கறது தான் நேற்று அபிக்கு ஏற்பட்ட சந்தேகம்/ கேள்வி. மற்றவர்கள் அபியைக் குற்றம் சொன்ன போது முகின் அதை மறுத்துப் பேசவில்லை. அந்தக் கேள்வியில் தான் இந்தப் பிரச்சினை ஆரம்பிக்கிறது. அப்பவும், எந்த விதத்திலும் தன்னால் முகின் காயப்பட்டுவிடக்கூடாது என்ற பிரக்ஞை அபிக்கு எப்பவுமே இருக்கு. அதனால் தான் ஒவ்வொரு தடவை கேள்வி கேட்கும் போதும் டிஸ்கி ஒன்னு போட்டுக் கொள்கிறார்.

மற்ற்வர்கள் எல்லோரும் தலையிடும் போது விவாதம் திசை திரும்புகிறது. மதுவும் ஷெரினும் கேட்டது நியாயமான கேள்விகள். ஆனால், அதற்கு முகின் பதில் சொல்லும் போது குறுக்கப் புகுந்து குட்டையைக் குழப்பினது கஸ்தூரி தான். ஷெரின் அவ்வளவு தூரம் கத்தியும், யாரும் கேட்கிற மாதிரி இல்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள், ‘எல்லா உண்மையும் சொல்லுடா’ என முகினுக்கு ஆதரவாக இறங்குகிறார்கள்.

அபிக்கும், முகினுக்கும் நடுவில் மருத்துவ முத்தம் மாதிரி எதுவோ நடந்திருக்கு. அந்த விஷயம் ஆண்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கென அபிராமிக்குத் தெரிய வரும்போது தான், ஏற்கெனவே ஹைப்பரான அபிராமி, அந்தரங்க விஷயம் வெளியே வந்துவிடுமோ என நினைத்து, அவுட் ஆப் கன்ட்ரோலுக்குப் போகிறார். கஸ்தூரி, வனிதா ஒரு பக்கம் பேச, மற்ற ஹவுஸ்மேட்ஸ் கத்திக் கொண்டிருக்க, ஆண்கள் டீம் ஒரு பக்கம் பேச, அந்த விஷயத்தை வெளியே சொல்லி அபியைக் காயப்படுத்தி, தான் மட்டும் தப்பித்துக் கொள்வதா என்கிற குழப்பத்தில் முகின் இருக்க, இது எல்லாம் சேர்ந்த ஓர் இக்கட்டான சூழ்நிலையில் தான் அபி, முகின் இர்ந்ண்டு பேரும் பர்ஸ்ட் அவுட் ஆகின்றனர்.

‘முகினிடம் என்ன பேசறேன்?’ என யாரிடமும் எதுவும் சொல்லவில்லை அபி. ஆனால் அபியிடம் முகின் பேசுகின்ற விஷயம்மெல்லாம் ஆண்களுக்குத் தெரிந்திருக்கு. அந்தரங்க விஷயம் உட்பட. இது தான் முகின் செய்த பெரிய தப்பு. பேசுவதைச் சொன்னதைக் கூட ஏத்துக்க முடியும். ஆனால் தனக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் நடந்த அந்தரங்க விஷயத்தை நண்பர்களிடன் ஒருவர் ஷேர் பண்ணிக் கொள்கிறார் என்றால், அந்தப் பெண் மேல் அவனுக்கு எந்த அக்கறையும் இல்லையென்றுதான் அர்த்தம். பச்சையாகச் சொல்ல வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட பெண்ணை அவன் வேற விதமாகத்தான் கூப்பிடுவான். முகின் சொல்கிற மாதிரி அன்பு, பாசம், நட்பு என எந்த உறவுமே அங்கு இல்லை. அதற்கு இடமும் இல்லை.

ஒருவேளை அந்த விஷயம் அவன் கண்ட்ரோலில் இல்லாமல் நடந்திருந்தாலும், அதைப் பற்றி தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதை எந்த விதத்திலும் நியாயப்படுத்தவே முடியாது.

தன் நண்பன் எந்த தப்பும் செய்யாமல், இத்தனை பேருக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்கு போய்ட்டானே என்கிற ஆதங்கத்தில், சாண்டி கவின் டீம் இந்த விஷயத்தை உடைத்துப் பேசுகின்றனர். ஆனால் முகின் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சபையில் இதைப் பேசும் போது தான் தன்னோட தப்பு என்னென்னு முகினுக்குத் தெரிகிறது.

“உனக்கு தான் காதல் இல்லை. அந்தப் பொண்ணு அத்து மீறிப் போறான்னு உனக்குத் தெரியும் போது, நீ விலகிப் போயிக்க வேண்டியது தானே!” என சேரனும், மதுவும் கேட்ட கேள்வி நியாயமானது தான். ஆனா சின்ன வயதிலிருந்து அன்பு, பாசத்துக்காக ஏங்கின ஒருத்தன், அப்படியொரு விஷயம் கிடைக்கும் போது கண்டிப்பாக அவனால விலகிப் போக முடியாது. புறக்கணிப்பு, அவமானம் என காயம்பட்ட ஒருத்தன், தன்னால் யாரும் காயப்பட்டுவிடக் கூடாதுன்னு தான் முதலில் நினைப்பான். முகினும் அப்படித்தான் நினைச்சிருக்கனும்.

தர்ஷன் ஆரம்பக் கட்டத்திலேயே மீராவிடம் இருந்து விலகிட்டான். அங்க அஃபெக்‌ஷன் எதுவும் கிடையாது. முகின் கேஸ் அப்படி இல்லை.

இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும், தெளிவாக வந்து சாரி கேட்டுட்டுப் போன அபியை பார்த்து பரிதாபம் தான் வந்தது.

அதற்கப்புறமும் வனிதா, கஸ்தூரி அதையே தான் பேசிட்டு இருந்தனர். அதுவும் ஆறுதல் சொல்றேன் என கஸ்தூரி பேசுவதைத் தயவு செய்து எடிட் பண்ணித் தூக்கி எறிங்க பிக் பாஸ். சத்தியமாக முடியவில்லை. ஆண்கள் அணி, வனிதாவை விட கஸ்தூரி மேல் தான் மரணக்காண்டில் இருக்கின்றனர். முக்கியமாக கவின்.

போன வாரம் வரைக்கும் சாக்‌ஷி அழும்போதெல்லாம் சமாதானபடுத்திக் கொண்டிருந்தார் ஷெரின். ‘சரி அவ தான் போய்ட்டா, இனிமேலாவது நிம்மதியா இருக்கலாம்’ என நினைத்தால், இப்ப அபிக்கு அதே வேலையைச் செய்ய வேண்டியதாக போய்விட்டது.

டாஸ்க் தொடர்ந்து நடந்தது. முகின் பாட்டு பாடி என்டர்டெயின் பண்ணினார். ‘வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு’ பாட்டு. ‘உங்க ஹோட்டல்ல ஈ அதிகமா இருக்கே!’ என வனிதா புகார் செய்ய, மேனேஜர் சேரன், க்ளீனிங் டீமிடம் சொல்கிறார். ‘அப்ப மேனேஜரையே வந்து ஈ ஓட்டச் சொல்லு’ என யாரோ சொல்ல, ‘அவரு வந்தததுல இருந்து ஈ தானே ஓட்டிட்டு இருக்காரு!’ என சாண்டி அடித்த கமென்டுக்கு சிரித்தது – லோஸ்லியா, முகின், அபிராமி. கோபம் வருகின்ற மாதிரி காமெடி பண்ணாதீர் சாண்டி.

கஸ்தூரி சர்வ ஜாக்கிரதையாக வனிதாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரைப் பீச்சாங்கையில் டீல் பண்ணிட்டிருந்தார் வனிதா.

கடைசியாக கவின் எழுதின பாட்டை, லோஸ்லியா பாட, கூட முகின் ஆட, அப்படியே பிக்கப் ஆகி வனிதா வரைக்கும் எல்லோரும் ஆடினார்கள்.

நாளின் முடிவில், ‘எல்லாம் சேர்ந்து என் வாழ்க்கையில் இப்படி கும்மி அடிச்சுட்டீங்களே!’ என்ற மனநிலையில் இருந்தார் அபிராமி.

மகாதேவன் CM