Shadow

Tag: Akshar Arbol School

ஈஞ்சம்பாக்கத்தில் அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளி

ஈஞ்சம்பாக்கத்தில் அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளி

சமூகம்
ஆசிரியர்கள் தினமான செப்டம்பர் 5 அன்று, ஆளுநர் பன்வரிலால் புரோஹித் அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளியின் ஈஞ்சம்பாக்கம் கிளையைத் திறந்து வைத்தார். மேற்கு மாம்பலத்திலும், தி.நகரிலும் இரண்டு பள்ளிகள் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்க, தற்போது பிரம்மாண்டமாக ஈஞ்சம்பாக்கத்திலும் ஒரு பள்ளியைத் திறக்கப்பட்டுள்ளது. 2011 இல் தொடங்கப்பட்ட அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளி தான் சென்னையின் முதல் IB World School என்பது குறிப்பிடத்தக்கது. IB - International Baccalaureate (இன்டர்நேஷ்னல் பக்காலோரியட்), என்பது 1968இல் ஸ்விடசர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கப்பட்ட ஒரு கல்வி நிறுவனம். மேரி தெரஸ் மெளரட் எனும் ஃப்ரெஞ்ச் கல்வியாளர், ‘அமைதியைப் போதிக்கும் கல்வித்திட்டம்’ என 1948இல் போட்ட விதையே, IB எனும் கல்விமுறை தொடங்கக் காரணம். இந்தியப் பல்கலைக்கழங்கள் உட்பட, உலகிலுள்ள அனைத்துப் பலகலைக்கழங்களாலும், சிறந்த கல்விமுறை என்ற அ...