Shadow

Tag: Alien Romulus review

ஏலியன்: ராம்யுலஸ் விமர்சனம்

ஏலியன்: ராம்யுலஸ் விமர்சனம்

அயல் சினிமா, திரை விமர்சனம்
பூமியிலிருந்து 1600 ஒளியாண்டுகள் தள்ளியுள்ள, பகலே இல்லாத ஒரு கிரகத்தில் சிக்கியுள்ளார் ரெயின். அவ்விடத்தை விட்டுத் தப்பிக்க, ரெயினின் முன்னாள் காதலன் டைலர் ஒரு யோசனையை முன்மொழிகிறான். அரைமனதுடன் சம்மதிக்கும் ரெயினும், அவனது இயந்திரத் தம்பி ஆன்டியும், டைலர் குழுவும், ஈவாகா எனுமிடத்திற்குச் செல்லத் தேவைப்படும் குளிர்சீர்நிலைக்கருவிகளைச் (Cryostatic Chamber) சேகரிக்க, ஒரு சிதிலமடைந்த விண்கப்பலுக்குள் செல்கின்றனர். விண்கப்பல் இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிற்கு ரோமுலஸ் என்றும்; மற்றதிற்கு ரெமுஸ் என்றும் பெயர். ரோம் என்ற நகரம் உருவாவதற்குக் காரணமானவர் ரோமுலஸ் என்பதால்தான், அவரது பெயரையே அந்நகரத்துக்குச் சூட்டியுள்ளனர். Romulus-இன் ஹாலிவுட் உச்சரிப்பு, ராம்யுலஸாக உள்ளதால், ராம்யுலஸ் என்றே தமிழ்த்தலைப்பு வருகிறது. கருவிகளைச் சேகரிக்கும் முயற்சியில், முகமணைப்பான்கள் (Facehuggers) ...