Shadow

Tag: Amaran movie thirai vimarsanam

அமரன் விமர்சனம்

அமரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அமரன் என்றால் மரணமில்லாதவன் எனப் பொருள். வீரத்திற்காக அஷோக் சக்ரா விருது பெற்ற மேஜர் தெய்வத்திரு. முகுந்த் வரதராஜனை, தனது படத்தில் பாட்டுடைத் தலைவனாகயாக்கி, அமரனாக்கியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. ஆனால், படம் அமரத்துவம் எய்துவது இந்து ரெபேக்கா வர்கீஸாக நடித்திருக்கும் சாய் பல்லவியின் அதி அற்புதமான நடிப்பாலேயே! சின்ன சின்ன உணர்ச்சிகளையும், முகத்தில் அநாயாசமாகக் கொண்டு வந்து அமரனை ஒரு காதல் படமாக மாற்றிவிடுகிறார். படத்தின் முதற்பாதியின் கலகலப்பிற்கு உதவியுள்ளார் முகுந்த் வரதராஜனின் அம்மா கீதாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம். லப்பர் பந்து படத்தில், கெத்து தினேஷின் அம்மாவாக நடித்து மனதில் நின்றவர், மீண்டும் ஒருமுறை பிரமாதப்படுத்தியுள்ளார். இரண்டு அம்மாக்களும் தான் எத்தனை வேறுபாடுகள் உடற்மொழியில், வசன உச்சரிப்பில்! ஒரு கட்டத்தில், தமிழ் சினிமாவில் சரண்யா பொன்வண்ணன், இது போன்று தொடர்ந...