Shadow

Tag: Anchor Bay Studios

மின்மினி விமர்சனம்

மின்மினி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கனத்த இருளில் சிக்கி ஒரு புழுவைப் போல் உழன்று கொண்டிருக்கும் ஒருவனை, ஒளிரும் வண்டான மின்மினிப் பூச்சியைப் போல் மாற்ற ஒருத்தி மெனக்கெடுகிறாள். பாரிமுகிலன் எனும் பள்ளி மாணவன், தனது நண்பனின் உயிரைக் காப்பாற்றிவிட்டு இறந்துவிடுகிறான். பாரிமுகிலனின் உறுப்புகள் கொடையாக அளிக்கப்பட்டதில், பிரவீணா எனும் பள்ளி மாணவிக்கு இதய மாற்று அறுவைச்சிகிச்சை நடைபெறுகிறது. பாரிமுகிலனைப் பற்றி அறிய நினைக்கும் பிரவீனாவிற்கு, பாரியின் மரணத்தால் தன்னியல்பை இழந்து, வாழ்வின் மீதான எந்தப் பிடிப்புமின்றி சுற்றித் திரியும் சபரியைப் பற்றித் தெரிய வருகிறது. சபரியை அதிலிருந்து பிரவீனா மீட்க நினைக்கும் பொழுது, சபரி காணாமல் போய்விடுகிறான். சபரியின் ஒளியை அவனுக்கு பிரவீனாவால் மீட்க முடிந்ததா என்பதே படத்தின் கதை. பதின் பருவத்து நடிகர்கள், வளர்ந்து வாலிப பருவம் எய்துவதற்காக எட்டு வருடம் காத்திருந்து இப்படத்தை முடித்துள்ளார் இய...
சிறுவர்கள் வளரும் வரை காத்திருந்த ‘மின்மினி’

சிறுவர்கள் வளரும் வரை காத்திருந்த ‘மின்மினி’

சினிமா, திரைச் செய்தி
ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான் இசையில், கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள ’மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன், "'மின்மினி' படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது. பெரிய மெனக்கெடல் இந்தப் படத்திற்குத் தேவைப்படுகிறது. ஹலிதா படங்களின் டைட்டிலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். சில்லுக்கருப்பட்டி, மின்மினி என டைட்டில் எல்லாமே ஹைக்கூ போல இருக்கும். படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், ரஹ்மான் சார் குடும்பத்தின் இசை இளவரசி கதிஜாவுக்கும் வாழ்த்துக்கள்" என்றார். ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான மனோஜ் பரமஹம்சா, "ஆட்டோ சங்கர் எடுத்தபோது என்னைப் பலரும் திட்டினார்கள். ஆனால், அதற்கு பதிலடியாக நிச...