அசுரவதம் விமர்சனம்
தலைப்பிலேயே கதை சொல்லிவிட்டார் இயக்குநர். நாயகன் அசுரனை வதம் செய்கிறார்.
அசுரனுக்கு ஓர் அழைப்பு வருகிறது. அதில் பேசும் குரல், ‘இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு சாவு’ என்கிறது. அடுத்து நடக்கும் சில நிகழ்வுகளில் அசுரன் அரண்டு போயிருக்கும் நிலையில் நாயகன் அறிமுகமாகிறார். அதன் பின் நடக்கும் ஆடு புலியாட்டமே படம்.
முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் வந்து, அபத்தமான நகைச்சுவை, பாடல்கள், பஞ்ச் டயலாக்குகள் போன்றவை எதுவுமின்றி, திசை மாறாமல் ஒரே நேர்க்கோட்டில் படத்தை நகர்த்தியமைக்கு இயக்குநருக்குப் பாராட்டுகள். சுருக்கமான பின் கதையில் கூறப்படும் பழி வாங்குவதற்கான வலுவான காரணத்தை யூகிக்க முடியாமல் திரைக்கதையைக் கொண்டு சென்றிருப்பது சிறப்பு.
படத்திற்கு ௭ஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு மிகப் பெரிய பலம். படத்தின் பலவீனங்களில் ஒன்று பின்ணனி இசை. காட்சிக்கு ‘டெம்போ’ ஏற்ற வேண்டுமானால் காது கிழியும் சத்தத்துடன்தான் பின்...