Shadow

Tag: Asvins movie vimarsanam

அஸ்வின்ஸ் விமர்சனம்

அஸ்வின்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘ஒரு உலகில் கண் மூடினால் மறு உலகில் கண் திறக்கலாம்’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. இந்த உலகில் வரக்கூடிய ஒரு பிரச்சனையை வேறு ஒரு உலகில் சென்று தீர்க்க வேண்டும். அதற்கு இந்த உலகில் உயிர்விடவேண்டும். அப்போது தான் அந்த உலகில் உயிர்பெற முடியும். இப்படியான ஒரு சூழல் நாயகன் வசந்த் ரவிக்கு வருகிறது. இது படத்தின் பின்பாதியில் வரக்கூடிய கதை. அப்போ முன்பாதி கதை? லண்டனில் மக்கள் வாழும் பகுதிகளுக்கு அப்பால் ஒரு பாழடைந்த மேன்சன் இருக்கிறது. அந்த மேன்சனுக்குள் பல அமானுஷ்யங்களும் கண்டுபிடிக்கப் படாத பிரச்சனைகளும் இருக்கின்றன. அந்த மேன்சனுக்குள் செல்கிறார்கள் வசந்த் ரவி டீம். காரணம்? ஒரு பிரபலமான யூட்யூப் தளத்திற்காக. சென்றவர்களுக்கு என்னானது என்பதே முன்பாதி கதை. முதலில் சொன்ன அந்த மறு உலகக் கதையே இவர்களின் மேன்சன் பிரவேசத்தால் தான் நிகழ்கிறது. ஒரு ஸ்கிரீன...