சாதனை படைத்த ‘அவதார் – 2’ முன்பதிவு விற்பனை
மிகப் பிரம்மாண்டமான காட்சியனுபவத்தை ‘அவதார்’ படம் மூலம் அனுபவம் இந்திய சினிமா தயாராகிக் கொண்டிருக்கிறது.
அதற்கான டிக்கெட் புக்கிங் ஓப்பனிங் தற்போது தொடங்கி இருக்கிறது. கண்னைக் கவரும் வகையிலான அட்டகாசமான திரையனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு கொடுக்கும் வகையில் ‘அவதார்’ திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என இந்த ஆறு மொழிகளில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. ஜேம்ஸ் கேம்ரூனின் இயக்கத்திற்கு என ஏராளமான இந்திய ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது பாக்ஸ் ஆஃபிஸ் வரலாற்றில் ‘அவதார்’ திரைப்படம் புதிய சாதனையை உருவாக்கி உள்ளது. இந்தப் படத்திற்கான சீக்வலில் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய வெறும் மூன்றே நாட்களில் ப்ரீமியம் வடிவத்தில் அமைந்த 45 திரைகளில் 15,000 டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைத...