பலம் விமர்சனம்
காபில் என்ற ஹிந்தி வார்த்தைக்குத் 'திறமையுள்ள' அல்லது 'சாதித்து முடிக்கக் கூடிய' எனப் பொருள் கொள்ளலாம். தமிழில், 'பலம்' என்ற தலைப்பில் டப் செய்து வெளியிட்டுள்ளனர்.
ரோஹன் பாண்டியராஜ்க்கும், சுப்ரியாவுக்கும் கண் பார்வை இல்லையெனினும், முதல் சந்திப்பிலேயே சுப்ரியா மீது காதல் வயப்படுகிறார் ரோஹன். திருமணம் ஆன இரண்டாவது நாளே அவர்கள் வாழ்வின் போக்கையே இரண்டு நபர்கள் சீர்குலைக்கின்றனர். விவேகத்தையும் நம்பிக்கையையும் மட்டுமே துணையாகக் கொண்டு வாழும் ரோஹன், தன் வாழ்க்கையை அழித்தவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
உறுத்தாத டப்பிங் மிகப் பெரிய ஆறுதல். சில இடங்களில் கைதட்டலும் பெறுகிறது. ரோஹன் தன் மனைவி சுப்ரியாவிடம் ரஜினி குரலில் பேசும் காட்சியை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். படத்தின் நாயகனான ரோஹனும் டப்பிங் ஆர்டிஸ்ட் தான்; அதுதான் அவன் பலமும். ஒட்டுமொத்த படமும் ஒரு மென்கவிதை போல் ...