பூக்குழி – பெருமாள் முருகன்
பூக்குழி என்பது பூக்களைக் கொண்ட குழி அல்ல. நெருப்புக் கங்குகளால் நிரப்பி, சாம்பல் பூக்காமல் கவனமாக விசிறப்பட்டு கனன்று கொண்டிருக்கும் குழி. மங்கல வழக்காய் பயன்படுத்தும் போதிலும் ஒருவிதமான அச்ச உணர்ச்சியை விதைக்கிறது. நாம் வாழ்ந்து வரும் சமகாலத்துக்கு சில பத்தாண்டுகள் முன் நடக்கும் காலமும் களமும்; நம் சமூகத்தில் இருக்கும் இறுக்கமான சாதிய மனோபாவத்தையும், அது யாரிடம், எங்கு, எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் கலப்புமணம் புரிந்து கொண்ட இருவரின் வாழ்வனுபவமாக விவரிக்கிறது. காலமும் களமும் மாறியிருப்பினும் மனோபாவங்களில் பெரும் மாறுதல் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்கிற வருத்துடனே ஆசிரியர் இந்நாவலை முன்வைக்கிறார். கலப்புமணம் புரிந்த குற்றத்துக்காய் மரணித்த தருமபுரி இளவராசனுக்கு இந்நாவலை சமர்ப்பித்திருக்கிறார்.
இரு வேறு சாதிகளைச் சேர்ந்த குமரேசனும் சரோஜாவும் மணம் முடித்து, குமரேசனின் ஊருக்கு தம்பதியாய...