Shadow

Tag: Bhoothath Azhvaar

பூதத்தாழ்வார் – எங்கும் நிறைந்தவனே என்னுள்ளும் நிறைந்தான்

பூதத்தாழ்வார் – எங்கும் நிறைந்தவனே என்னுள்ளும் நிறைந்தான்

ஆன்‌மிகம், இது புதிது
என் மனதுக்குள் இருக்கும் நாராயணனே இந்த பிரபஞ்சமாகவும் வியாபித்து இருக்கிறார். முதலாழ்வார்கள் மூவராவர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். இவர்கள் மூவரும் 7 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த சமகாலத்தவர்கள். பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திலும், பூதத்தாழ்வார் மாமல்லபுரத்திலும், பேயாழ்வார் மயிலாப்பூரிலும் அவதரித்தவர்கள். இவர்களின் தாய் தந்தையர் பற்றிய குறிப்பு இல்லை. மூவருமே குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதல் மூன்று திருவந்தாதிகளை இவர்கள் படைத்தார்கள். ஆழமான தத்துவம், பக்தி நெறி மற்றும் இனிய தமிழால் இறைமையைப் போற்றியவர்கள். இவர்கள் மூவரையும் திருக்கோவிலுரில் இறைவன் இணைத்தார். அதன் பிறகு மூவரும் இணைந்தே பல திவ்விய தேசங்களுக்குச் சென்று பெருமானைப் பாடி மங்களாசாசனம் செய்தனர். திருக்கோவிலுரில், ஓரிரவு ஒரு வீட்டின் சிறு திண்ணையில் பொய்கையாழ்வார் ப...