பிக் பாஸ் 3: நான் 54 – பாய்ஸ் டீமின் க்ரூப்பிசம்
‘மானாமதுரை மாமரக் கிளையிலே’ பாடலுடன் தொடங்கியது. ஆரம்பெல்லாம் நன்றாகத்தான் இருக்கு, ஆனால் ஃபினிஷிங் சரியில்லியேப்பா உங்களிடம். ‘நேத்து சொல்லாம தூங்க போய்ட்டீங்களே!’ என சேரனிடம் கேட்டாங்க லாஸ். “என் பொண்ணு எங்கிட்ட பேசாம இருக்கும் போது நான் சொல்லாம போனதுல தப்பில்லையே! நீ பேசறதுக்கு வரவும் மாட்டேங்கற. டைமும் கொடுக்க மாட்டேங்கற. பேசலாம், நிறைய பேசலாம்” எனச் சொல்லிவிட்டுப் போனார் சேரன். இதை அப்படியே பாய்ஸ் டீமிடம் சொன்னார் லாஸ். “உங்க அப்பா, ச்சேச்சே சேரன் சார் எனக்கும் குட்மார்னிங் சார்னு சொன்னாரு” என கவினும் சொன்னார். “சோ, அப்பான்னு கூப்பிட்டதுக்கே லாஸ் இப்ப வருத்தப்படறாங்க போல!” என அந்தப் பக்கம் வனிதாவிடம் ரிப்போர்ட் செய்தார் சேரன்.
“உங்கிட்ட கொஞ்சம் பேசணும் தம்பி” என தர்ஷனிடம் சொல்லும் சேரன், கொஞ்ச நேரத்தில் பேசவும் செய்தார். கொஞ்ச நேரம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அப்பொழுது பார்...